பொது செய்தி

இந்தியா

தொடரும் சீனாவின் பிடிவாதம் :பேச்சில் முடிவு ஏற்படவில்லை

Updated : அக் 13, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :சீனாவின் முரட்டு பிடிவாதத்தால் கிழக்கு லடாக்கின் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.கிழக்கு லடாக்கின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் கடந்த ஆண்டு முயன்றது. அதை நம் ராணுவம் முறியடித்தது. வலியுறுத்தல்இதையடுத்து கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து இரு
சீனா, பிடிவாதம் பேச்சு, முடிவு ஏற்படவில்லை

புதுடில்லி :சீனாவின் முரட்டு பிடிவாதத்தால் கிழக்கு லடாக்கின் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.கிழக்கு லடாக்கின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் கடந்த ஆண்டு முயன்றது. அதை நம் ராணுவம் முறியடித்தது.


வலியுறுத்தல்இதையடுத்து கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ராணுவத்தின படைப் பிரிவு தளபதிகள் இடையே இதுவரை 12 சுற்று பேச்சுகள் நடந்துள்ளன. ஜூலை 31ல் நடந்த பேச்சைத் தொடர்ந்து சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.உத்தரகண்ட் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் சீன ராணுவத்தின் சமீபத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
மேலும் தங்கள் எல்லையில், சீன ராணுவம் பல்வேறு கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவத்தின் படைப் பிரிவு தளபதிகள் இடையேயான 13வது சுற்று பேச்சு நேற்று முன்தினம் நடந்தது.சீனாவின் மோல்டோவில் நடந்த இந்தப் பேச்சு, எட்டரை மணி நேரம் நீடித்தது. படைகளை திரும்பப் பெறுவது குறித்து நம் ராணுவக் குழு வலியுறுத்தியது.
ஆனால் அதை ஏற்க சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக நம் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:கிழக்கு லடாக்கின் எல்லையில் உள்ள நிலைமையை மாற்றுவதற்காக சீன ராணுவம் தன்னிச்சையாக முயன்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளது.


நடவடிக்கைஎல்லையில் அமைதி நிலவவும், இரு தரப்பு உறவுகள் தொடரவும், எல்லையில் இருந்து உடனடியாக படைகள் விலக்கி கொள்ளப்பட வேண்டும் என, பேச்சில் நம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இதற்காக நம் குழுவினர் அளித்த ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஏற்க சீன ராணுவம் மறுத்துள்ளது. அதனால் படைகளை திரும்பப் பெறுவதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.சமீபத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேசியபோது மிக விரைவில் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை சீன ராணுவம் நிறை
வேற்றவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன ராணுவம் சார்பில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். தற்போது எல்லையில் உள்ள நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த இந்தியா முயற்சிக்கிறது.


பாதுகாப்புபடைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஏற்க முடியாத, நியாயப்படுத்த முடியாத வாதங்களை இந்திய தரப்பு முன் வைத்துள்ளது. நிறைவேற்ற முடியாத அந்த கோரிக்கைகளால் பேச்சில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. எல்லையில் அமைதியும், பாதுகாப்பும் நிலவுவதை சீனா விரும்புகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-202123:08:03 IST Report Abuse
அப்புசாமி ஏன்?
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-அக்-202117:58:15 IST Report Abuse
Darmavan சீன போல் இந்தியா ஏன் பேசவில்லை.மேன்மை உதவாது.
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
12-அக்-202114:21:21 IST Report Abuse
Mohan அவன் பேச்சு வார்த்தைன்னு இழுக்குறதே அவன் சண்டை போடறதுக்கு எல்லா தேவையையும் நம்ம எல்லைல கொண்டு வந்து சேக்கறதுக்கு தான் அதனால நாம் மிக கவனமா இருக்கனும். .நாமும் நம்ம எல்லைல எல்லா வகையிலும் எந்த நேரத்திலும் போருக்கு தயாரா இருக்கனும்..எப்பிடியும் போர் வராம இருக்காதுன்னு தோணுது...அவனுக்கு இப்போ அமெரிக்காவுல அவனோட பொம்மை ஆட்சி தான் நடக்குது... Biden அவனோட ஆளு தான்..நாம அமெரிக்கா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கோணும்.. முக்கியமா அவன் இழுக்கிறது 2024 நம்ம பொது தேர்தலுக்கு எப்படியும் மோடியை வராம பண்றதுக்கு எல்லா வேலையும் நடக்குது...அவன் நெனச்ச மாதிரி ராகுல் , மம்தா மாதிரி யாராவது வந்து தொலைஞ்சாங்கன்னா நம்ம இந்தியாவை சுலபமா காரியம் சாதிச்சிரலாம்..அதனால 2024 குள்ள ஒரு முடிவு கட்டிட்டு போன நாம தப்பிச்சோம் இல்ல அருணாச்சல, லடாக்,POK எல்லாம் அவங்க கைவசம் போவது உறுதி..ஆண்டவன் தான் நம்மளையும் நம்ம மோடியையும் இந்த ஆட்ச்சியையும் இனி ஒரு 10 வருசத்துக்கு காப்பதோனும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X