நிலக்கரிக்கு தட்டுப்பாட்டால் மின் வெட்டு? மந்திரிகளுடன் அமித் ஷா ஆலோசனை!

Updated : அக் 13, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி ;நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடும் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பல மாநில அரசுகள் கூறியுள்ள நிலையில், மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.நாட்டின் மொத்த மின்சார தேவையில் 70 சதவீதம், நிலக்கரியால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்கள் வாயிலாகவே கிடைத்து
நிலக்கரி, தட்டுப்பாடு, மின் வெட்டு? மந்திரிகள், அமித் ஷா

புதுடில்லி ;நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கடும் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பல மாநில அரசுகள் கூறியுள்ள நிலையில், மின்சாரம் மற்றும்
நிலக்கரி துறை அமைச்சர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

நாட்டின் மொத்த மின்சார தேவையில் 70 சதவீதம், நிலக்கரியால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்கள் வாயிலாகவே கிடைத்து வருகிறது. அடுத்த ஒரு சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், கடும் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தமிழகம், பஞ்சாப், ஒடிசா உட்பட பல மாநில அரசுகள் கூறியுள்ளன.
நிலக்கரி கிடைக்காவிட்டால் டில்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதை, மத்திய அரசு மறுத்துள்ளது. 'அனல்மின் நிலையங்களில் 72 லட்சம் டன் நிலக்கரி உள்ளது.

'மேலும் 'கோல் இந்தியா' நிறுவனத்திடம் 400 லட்சம் டன் இருப்பு உள்ளது. அதனால் தட்டுப்பாடு ஏதும் இல்லை' என, மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.'நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் வினியோகம் பாதிக்கப்படும் என பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன' என்று, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் மத்திய நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆகியோருடன், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நேற்று ஆலோசனை நடத்தினார். உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிலக்கரி இருப்பு, அதன் வினி
யோகம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-அக்-202113:20:52 IST Report Abuse
Kasimani Baskaran ஏற்கனவே மில்லியன் டன் கணக்கில் நிலக்கரியை காணோம் என்று திமுக அரசு சொன்னது. இப்பொழுது நீட் இந்தியாவுக்கே வேண்டாம் என்பது போல நிலக்கரி இந்தியாவிலேயே கையிருப்பு குறைவு என்ற புதிய திரைக்கதை வசனம் எழுதுகிறார்கள்...
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
12-அக்-202112:54:21 IST Report Abuse
RandharGuy வாக் சின்.. ஆக்சிஜென்.. இப்போ நிலக்கரி... இதுதான் ..குட் கவர்னன்ஸ். எல்லைக்கோட்டை கோட்டை விட்டீங்க .. உள்ளுக்குள்ள இப்போ டெய்லி அக்கிரமம்.. இது தான் நம்ம ஜி யோட ஆளும் திறமை .....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-அக்-202108:40:46 IST Report Abuse
duruvasar தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா ? இன்றிரவு தமிழக காட்சி ஊடகங்களில் காரசார நடுநிலை விவாத அலசலை காண தயாராகுங்கள்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
12-அக்-202114:21:34 IST Report Abuse
Dhurveshஎல்லாம் adhanikku நிலக்கரி துறையை தாரை வார்க்க தான் இந்த ஏற்பாடு, இது எல்லாம் மோடி யின் தில்லாலங்கடி வேலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X