அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் ஒரு பொய்யன்: வைகோ கடும் கோபம்

Updated : அக் 13, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
''பிரபாகரனை சீமான் இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை; ஆமைக் கறி, மாட்டுக் கறி எல்லாம் சாப்பிடவில்லை. சீமான் ஒரு பொய்யன்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.தி.மு.க.,விலிருந்து வைகோ நீக்கப்பட்ட போது, தீக்குளித்து இறந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஐவருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்தில்
சீமான் , பொய்யன், வைகோ, கோபம்

''பிரபாகரனை சீமான் இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை; ஆமைக் கறி, மாட்டுக் கறி எல்லாம் சாப்பிடவில்லை. சீமான் ஒரு பொய்யன்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.தி.மு.க.,விலிருந்து வைகோ நீக்கப்பட்ட போது, தீக்குளித்து இறந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஐவருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்தில் நடந்தது.

அதில், வைகோ பேசியதாவது:பிரபாகரனை சீமான் இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை. போட்டோ எடுக்க சீமான் ஆசைப்பட்டார். போட்டோ எடுக்கக் கூடாது என்று பிரபாகரன் கூறினார்.'பிரபாகரனுடன் சேர்ந்து ஆமைக் கறி சாப்பிட்டேன்; உடும்புக் கறி சாப்பிட்டேன்; மாட்டுக் கறி சாப்பிட்டேன்' என சீமான் பொய் சொல்கிறார்.

விடுதலை புலிகள், சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எல்லா இடத்திலும் சீமான் பொய் பேசுகிறார். விடுதலை புலிகள் பற்றியும், பிரபாகரனை பற்றியும் பேசி, ஒன்றும் தெரியாத இளைஞர்களை மூளைச்சலவை செய்து தன் பக்கம் இழுக்கிறார்.'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கி விட்டு, நியூட்ரினோவுக்கு பணம் வாங்க, வைகோ மகன் புறப்பட்டு விட்டார்' என, தன் ஆட்களை வைத்து 'வீடியோ' போட வைத்தார் சீமான். இந்த அவதுாறு செயலுக்காக, சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தார்.

என் மனைவியின் அண்ணன் மகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்து இறந்தார்; என் குடும்பமும் ஒரு உயிரை இழந்துள்ளது. என் மகன் துரையை அரசியலுக்கு அழைக்கின்றனர். வரும் 20ம் தேதி, என்ன முடிவு வரும் என்பது எனக்கு தெரியாது. என் கருத்தை கேட்டால், துரை அரசியலுக்கு வரக்கூடாது என்பேன்.

மாவட்ட செயலர்கள் முடிவு எடுக்கட்டும். நான் கோழை அல்ல.நான் இந்த கட்சியை துாக்கி நிறுத்துவேன். இந்த கட்சி சாயவில்லை; மீண்டும் இமயம் போல கம்பீரமாக கொண்டு வருவேன். இது, எனக்காக தீக்குளித்த ஐவர் மீதும் ஆணை. என் கனவு, கானல் நீராகி இருக்கலாம்; ஆனால், காலம் நிச்சயமாக மாறும்.

தமிழ் ஈழம் மலர, மீண்டும் பிரபாகரன் படை உருவாகிறது என்ற உணர்வுடன் பாடுபடுவேன். எந்த ஒரு கனவுக்காக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தேனோ, அந்த கனவு நிறைவேற, மீண்டும் போராடுவேன்.இவ்வாறு வைகோ பேசினார். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh J - Madurai,இந்தியா
19-அக்-202112:51:18 IST Report Abuse
Venkatesh J சீமான் ஒரு பொய்யன் என்று கூறும் அறிவாளிகளுக்கு கூறுகிறேன். அவர் என்ன செய்தார், இன்னும் ஆட்சிக்கே வரவில்லை இருந்தும் பல நல்ல காரியங்களை மக்களுக்காக செய்துள்ளார். ஒரு சிறிய உதாரணம் பனை திட்டம், தூர் வாரும் திட்டம், அரசியல் ஒரு சாக்கடை என்று கூறி இருந்த மக்களுக்கும் அதை பற்றி தெரியாதவர்களுக்கும் அரசியல் என்ன என்று அனைவரையும் படிக்கவைத்த ஆசான். யாரெல்லாம் தமிழர்கள் என்று கண் விழித்து பார்க்க வைத்தார். இன்னும் வேண்டும் என்றால் அவர் எடுத்து வைக்கும் அரசியல் தத்துவத்தை போய் பாருங்கள், மற்ற இருக்கும் கட்சிகளிடம் என்ன உள்ளது என்று ஆராய்ந்து பார்க்கவும். செய்தவை அனைத்தும் நல்லவைகளே. இது வரை ஆட்சியில் இருந்தவர்கள், இருக்கிறவர்கள் எந்த ஒரு கடனில் இல்லாமல் எவ்வளவு கோடிகளில் மிதக்கிறார்கள் ஆனால் அரசாங்கம் மட்டும் எப்படி கடனில் இருக்கிறது ? இது தெரியாமல் தனி மனிதரை விமர்சனம் செய்கிறீர்களே. அப்படி செய்யும் முன் தலைவராக இருந்த அனைவரையும் பகுத்தறிந்து பார்த்து சீமானை பார்ப்பது போல் அவர்களையும் பார்த்து விமர்சனம் செய்யுங்கள். உண்மையான தமிழர்கள் இது போல் பேசமாட்டார்கள் அவர்கள் அறத்தின் வழியில் நடப்பவர்கள். பாவம் ஐயா வைகோ அவர்கள், அவரை பற்றி என்னத்த சொல்ல. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை செய்யும் அரசியலை பார்த்தால் நகைத்துவிட்டு கடந்து செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-அக்-202116:53:45 IST Report Abuse
Bhaskaran கவுண்டமணியும் செந்திலும் சொல்வதுபோல் அவன் ஒரு மொள்ளமாரி நானொரு முடிச்சவுக்கி அப்படீன்னு இந்த ரெண்டு பேரைப்பற்றியும் தமிழ்நாடு அறியும் .சங்கரன் கோவில்நகரில் இருக்கும் ஸ்டார் hotel .பினாமிமுதலாளியார் என்பது அங்குபோய் கேட்டால் தெரியும்
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
16-அக்-202111:56:51 IST Report Abuse
Thirumurugan நீங்கள் யாரைப்பற்றியும் பேசுவதற்கு தகுதி இல்லாதவர். ஸ்டாலின் அவர்களுக்காக என்னை கட்சியில் இருந்து தூக்கி விட்டார்கள் என்ற சொன்னவர் இப்போது அவருக்கு பல்லக்கு தூக்கி கொண்டு இருக்கிறார். திரு கருணாநிதியை பற்றி நீங்கள் பேசாத பேச்சா ......மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. ஈழம் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. காங்கிரஸூடன் கூட்டணி வைத்துக்கொண்டு இனியும் ஈழம் பற்றி பேசி கொச்சை படுத்தாதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X