அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பொன்விழா 17ல் கொண்டாட்டம்

Updated : அக் 13, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை :அ.தி.மு.க., பொன்விழா, வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். காலை 10:00 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 12:00 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் நடந்தவை குறித்து, நிர்வாகிகள் சிலர்
அ.தி.மு.க., பொன்விழா , 17ல் கொண்டாட்டம்

சென்னை :அ.தி.மு.க., பொன்விழா, வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். காலை 10:00 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 12:00 மணிக்கு நிறைவடைந்தது.

கூட்டத்தில் நடந்தவை குறித்து, நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அமைப்பு செயலர் ஜெ.சி.டி.பிரபாகர் பேசுகையில், 'பொன் விழாவை ஒட்டி, கட்சி தலைமை அலுவலகத்திற்கு, எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட வேண்டும்.


அலுவலகத்திற்கு இடம் கொடுத்த ஜானகி பெயரை, வி.ஐ.பி., அறைக்கு சூட்ட வேண்டும். 'குழுக்கள் கூடும் அறைக்கு, ஜெயலலிதா பெயர் சூட்ட வேண்டும். எம்.ஜி.ஆர்., கட்சி துவக்குவதற்கு முன், அவருக்கு எம்.ஜி.ஆர்., மன்றங்கள் உறுதுணையாக இருந்தன. 'அதிலிருந்தவர்களை அழைத்து கவுரவிக்க வேண்டும். கட்சிக்காக சிறை சென்றவர்களை பாராட்டி, கவுரவிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., குறித்து புத்தகம் எழுதியவர்கள், இதழ் நடத்தியவர்களை பாராட்ட வேண்டும்' என்றார்.கட்சி அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியபோது, முன்னாள் அமைச்சர் வளர்மதி எழுந்து, 'உயிலில் அவ்வாறு இல்லை' என்றார்.

உடனே, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், 'அவர் பேசுவதை முதலில் கேளுங்கள். குறுக்கே பேசாதீர்கள்' என்று கண்டித்தார். இதனால், கோபமடைந்த வளர்மதி வெளியேற முயன்றார். சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.அதன்பின், மாவட்ட வாரியாக பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, மூத்த நிர்வாகிகளை கவுரவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. பொன்விழா கொண்டாட்ட விபரங்களை, கட்சி தலைமை அறிவிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




'சசிகலா பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள்!'



முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:ஜெயலலிதா மறைவுக்கு பின், 1.46 கோடி ஓட்டுக்கள் பெற்று, இமயமலை போல் கட்சி உயர்ந்துள்ளது. இந்நிலையில், பரங்கிமலை போல இருப்போர், நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறுவது, இந்த நுாற்றாண்டின் சிறந்த நகைச்சுவை. அவைத் தலைவர் பட்டியலில், நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. கட்சி தான் முடிவெடுக்கும். கட்சி தலைமையில் எந்தவித மாற்றமும் இல்லை; குழப்பமும் இல்லை.

சிறையிலிருந்து வந்த போது, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்லவில்லை. இப்போது, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக செல்ல உள்ளார். அவர் பொது மக்களாலும், தொண்டர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர். எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.
அவர் பக்கம் யாரும் போக மாட்டார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டன், சாகும் வரை அ.தி.மு.க.,வில் தான் இருப்பான்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
12-அக்-202111:13:31 IST Report Abuse
sankar வள்ர்மதியை அவைத்தலைவராக்கினால் கட்சி பிரமாதமான வளர்ச்சியடையும். ஒற்றுமை ஓங்கும். செய்வீர்களா, செய்வீர்களா ?
Rate this:
Cancel
12-அக்-202111:09:44 IST Report Abuse
ராஜா முதலில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படப் பாருங்கள்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
12-அக்-202109:35:38 IST Report Abuse
Suri இந்த பொன்விழா கொண்டாட்டத்திற்கு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இருக்குமா? அவர்கள் இல்லாமல் கொண்டாட்டம் நடக்கும்? ஆட்டுவிப்பவன் எப்படி ஆட்டப் போகிறான்? அடிமை கட்சியின் எத்தனை சதவிகிதம் கபளீகரம் செய்யப்படும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X