சில வரி செய்திகள்

Added : அக் 11, 2021
Share
Advertisement
அமிதாப் திடீர் விலகல்மும்பை: இந்திய திரையுலகின் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், 79, பான் மசாலா நிறுவன விளம்பரத்தில் நடித்தார். விளம்பரம் 'டிவி'யில் ஒளிபரப்பான நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமிதாப், அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பி
 சில வரி செய்திகள்

அமிதாப் திடீர் விலகல்

மும்பை: இந்திய திரையுலகின் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், 79, பான் மசாலா நிறுவன விளம்பரத்தில் நடித்தார். விளம்பரம் 'டிவி'யில் ஒளிபரப்பான நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமிதாப், அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலித் பெண் பலாத்காரம்

நொய்டா: உத்தர பிரதேசத்தின் ஜெவார் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நேற்று முன்தினம் வயலுக்கு சென்றார். அங்கு, மாடு மேய்க்க வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த, 28 வயது நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். குற்றவாளி, தன்னை பலருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவான நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை வழக்கில் நாளை தண்டனை

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவரது மனைவி உத்ரா, 25, கடந்த ஆண்டு வீட்டில் துாங்கியபோது பாம்பு கடித்து இறந்தார். விசாரணையில், அது இயல்பாக நடந்த சம்பவம் அல்ல, திட்டமிட்ட கொலை என கண்டறிந்த போலீசார் சூரஜை கைது செய்தனர். விசாரணை முடிவில் சூரஜ் கொலை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனையை நாளை வழங்குகிறது. 'சான்றுகள் மற்றும் சூழ்நிலை அடிப்படையில் போலீசார் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை தண்டனைக்கு உள்ளாக்கி உள்ளனர்' என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ரயிலில் தொல்லை: 8 பேர் கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் இகத்புரி - கசரா இடையே சமீபத்தில் சென்ற லக்னோ- - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், 20 வயது பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. அவரை காப்பாற்ற முயன்ற கணவரை தாக்கியதுடன், பயணியரை மிரட்டி பணம், நகைகளையும் பறித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X