பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் பேச்சு

Added : அக் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தடுப்பூசி பிரச்னை மற்றும் பருவநிலை மாநாடு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர். 'கோவிஷீல்டு' உட்பட, இந்திய அரசு அனுமதித்த கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்' போட்டவர்கள் பிரிட்டன் வரும்போது, 10 நாட்கள் கட்டாய

புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.

அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தடுப்பூசி பிரச்னை மற்றும் பருவநிலை மாநாடு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர். 'கோவிஷீல்டு' உட்பட, இந்திய அரசு அனுமதித்த கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்' போட்டவர்கள் பிரிட்டன் வரும்போது, 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் தேவையில்லை' என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும், நம் நாட்டில் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை பிரிட்டன் அரசு அங்கீகரித்தது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.

இது குறித்து டில்லியில் உள்ள பிரிட்டன் துாதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்று பரவலை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து போராடியது, சர்வதேச பயணங்களை எச்சரிக்கையுடன் திறப்பது குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்தியா - பிரிட்டன் உறவை வலுப்படுத்துவது, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் முன்வைக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தலிபான்களுடனான ஒத்துழைப்புக்கு, ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறை அவசியம் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஆப்கனில் மனித உரிமைகளை நிலை நிறுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X