குண்டு வெடிப்பில் பத்திரிகையாளர் பலி

Added : அக் 11, 2021
Share
Advertisement
கராச்சி-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஷாஹித் ஜெக்ரி, 35, என்ற பத்திரிகையாளர், ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு வேலைக்காக நண்பருடன் காரில் பயணித்தார்.அந்த காரை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காரில் இருந்த ஷாஹித் ஜெக்ரியும், அவரது நண்பரும்

கராச்சி-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஷாஹித் ஜெக்ரி, 35, என்ற பத்திரிகையாளர், ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்

. இவர், நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு வேலைக்காக நண்பருடன் காரில் பயணித்தார்.அந்த காரை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காரில் இருந்த ஷாஹித் ஜெக்ரியும், அவரது நண்பரும் படுகாயமடைந்தனர்.

பின், அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.எனினும் பத்திரிகையாளர் ஷாஹித் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு 'பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி' என்ற தடை செய்யப்பட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X