பயங்கரவாதிகளுடன் சண்டை 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.ஜம்மு - -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை அப்பகுதியை நம் வீரர்கள் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள்

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு - -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை அப்பகுதியை நம் வீரர்கள் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு அதிகாரி உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்; மற்றொருவர் காயமடைந்தார்.இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூவர் சிக்கி உள்ளனர். பயங்கரவாதிகள் தப்ப முடியாத வகையில் ஒட்டு மொத்த பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X