பொது செய்தி

தமிழ்நாடு

மகனிடமிருந்து சொத்தை மீட்ககோரி ஆம்புலன்சில் வந்து பெற்றோர் புகார்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தங்களை கவனிக்காத மகனிடமிருந்து சொத்தை மீட்க வலியுறுத்தி, உடல்பாதிக்கப்பட்ட பெற்றோர் ஆம்புலன்சில் வந்து மனு அளித்துள்ளனர்.ராமநாதபுரம் வடக்குதெரு பொட்டவயயைச் சேர்ந்தவர் சண்முகம் 75, அவரது மனைவி முத்துலட்சுமி64. இவர்களுக்கு ஒருமகன், இருமகள்கள் திருமணமாகிவிட்டது.இந்த நிலைமையில் சொத்தை எழுதிவாங்கிய மகன் முனியசாமி
 மகனிடமிருந்து சொத்தை மீட்ககோரி ஆம்புலன்சில் வந்து பெற்றோர் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தங்களை கவனிக்காத மகனிடமிருந்து சொத்தை மீட்க வலியுறுத்தி, உடல்பாதிக்கப்பட்ட பெற்றோர் ஆம்புலன்சில் வந்து மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் வடக்குதெரு பொட்டவயயைச் சேர்ந்தவர் சண்முகம் 75, அவரது மனைவி முத்துலட்சுமி64. இவர்களுக்கு ஒருமகன், இருமகள்கள் திருமணமாகிவிட்டது.இந்த நிலைமையில் சொத்தை எழுதிவாங்கிய மகன் முனியசாமி தங்களை கவனிக்கவில்லை, மருத்துவ செலவிற்கும், சாப்பாட்டிற்கும் பணமின்றி சிரமப்படுகிறோம். தங்களை கவனிக்காத மகனிடமிருந்து சொத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, உடல்பாதிக்கப்பட்ட பெற்றோர் ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

முத்துலட்சுமி கூறியதாவது: கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து,பின் இங்குகூலிவேலை செய்து நீலகண்டி ஊரணி கே.கே.நகரில் இடம் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விட்டோம். வீட்டு கடனை அடைத்துவிடுவதாக மகன், மருமகன் கூறியதை நம்பி செட்டில்மென்ட் பத்திரம் எழுதிகொடுத்துள்ளோம். ஆனால் தற்போது எங்களை கவனிப்பது இல்லை, சொத்தை கேட்டால் மிரட்டுகின்றனர்.

மருத்துவ செலவிற்கு, சாப்பாட்டு வழியின்றி, எனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளோம். எங்கள் கடனை நாங்கள் அடைத்துக்கொள்கிறோம். மகனிடம் உள்ள செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்துசெய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்றார்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X