போலீஸ் செய்திகள்/

Added : அக் 11, 2021
Share
Advertisement
சிறுமி கடத்தல்:- இருவர் கைதுபரமக்குடி: பரமக்குடி அருகே கண்டி கொண்டான் மாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 48. இவர் தனது 17 வயது மகளுடன் கோயம்புத்துாரில் வசித்து வருகிறார். கோயம்புத்துாரில் பணியாற்றி வந்த பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த இர்பான் அலி, 21, அவரது மகளை காதலித்துள்ளார்.அக்., 9 இரவு தனது மகளுடன் கோயம்புத்துாரிலிருந்து புறப்பட்டு, 10 ம் தேதி 3:15 மணிக்கு

சிறுமி கடத்தல்:- இருவர் கைது

பரமக்குடி: பரமக்குடி அருகே கண்டி கொண்டான் மாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 48. இவர் தனது 17 வயது மகளுடன் கோயம்புத்துாரில் வசித்து வருகிறார். கோயம்புத்துாரில் பணியாற்றி வந்த பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த இர்பான் அலி, 21, அவரது மகளை காதலித்துள்ளார்.அக்., 9 இரவு தனது மகளுடன் கோயம்புத்துாரிலிருந்து புறப்பட்டு, 10 ம் தேதி 3:15 மணிக்கு பரமக்குடி வந்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் நின்ற பெரியபட்டினம் இர்பான் அலி, 21, முகம்மதியாபுரம் அஸ்லாம், 20, பெரியபட்டினம் இஸ்மாயில், உமர்அலி உள்ளிட்டோர் கிருஷ்ணமூர்த்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது மகளை கடத்தி சென்றனர். பரமக்குடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், சிறுமியை மீட்டதுடன், இர்பான் அலி, அஸ்லாம் இருவரை கைது செய்தார். மேலும் தலைமறைவான இஸ்மாயில், உமர்அலி உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

பணம், அலைபேசி பறிப்பு

எமனேஸ்வரம்: பரமக்குடி பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமு மகன் சுரேஷ், 40. இவர் நேற்று முன்தினம் மதியம் பரமக்குடி நகராட்சி அருகில் வைகை ஆற்றில் நடந்து சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத இருவர், சுரேஷ் யை கேலி செய்து அசிங்கமாக பேசி கை மற்றும் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சுரேஷ் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயின், மற்றும் அலைபேசியை பறித்து தப்பினர்.

தகராறை விலக்கியவர் மீது தாக்கு

பரமக்குடி: பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன், 30. இவர் செம்பொன்குடி ஊரணி கரை வழியாக சென்றபோது, விஜி, அபி, பூச்சி, பழனி ஆகிய நால்வரும் சண்டையிட்டனர். அதனை தட்டிக்கேட்ட ராமநாதனை, நால்வரும் சேர்ந்து பாட்டிலால் அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் ராமநாதன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

ஊர் கூட்டத்தில் பிரச்னை: 8 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுாரில் கிராம கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் 58, மற்றும் சரவணன் 52, இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரச்னை தொடர்பாக ஜெகநாதன் கொடுத்த புகாரில், பாரனுார் சரவணன் மற்றும் 3 பேர் மீதும், சரவணன் கொடுத்த புகாரில், பாரனுாரை சேர்ந்த கவுதம், அருண், பத்மநாதன், ஜெகநாதன் ஆகியோர் மீதும், திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X