பொது செய்தி

தமிழ்நாடு

குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 262 பேர் மனுக்கள்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றைய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 262 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கொரோனா பரிசோதனைக்கு பின் மக்கள் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் (பொ) காமாட்சி கணேசன்மக்களிடம் மனுக்களை பெற்றார். சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1000 வழங்கும்

ராமநாதபுரம் : மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றைய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 262 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கொரோனா பரிசோதனைக்கு பின் மக்கள் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் (பொ) காமாட்சி கணேசன்மக்களிடம் மனுக்களை பெற்றார். சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1000 வழங்கும் ஆணையை வழங்கினார். மொத்தம் 262 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மூலம் மழைக்காலம், புயல்நேரத்தில் மக்களை ஆபத்தில் காப்பது குறித்து, ரெட் கிராஸ் அமைப்பு, தீயணைப்புதுறையினர் மூலம் செய்முறை விளக்கம் நிகழ்ச்சி கலெக்டர் தொடங் கி வைத்தார்.நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் (பொது) பழனிக்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், சமூகபாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கந்தசாமி பங்கேற்றனர்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X