பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் அரிய வகை மரங்களின் சரணாலயம்; மழை வளம் பெருக வாய்ப்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் அழிந்து வரும் அரிய மர வகைகள் நடப்பட்டு மரங்களின் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள மாவட்டத்தில் மழை வளம் பெருக வாய்ப்பாக அமைந்துள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் என மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி ஒன்றியம் உரப்புளி

பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் அழிந்து வரும் அரிய மர வகைகள் நடப்பட்டு மரங்களின் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள மாவட்டத்தில் மழை வளம் பெருக வாய்ப்பாக அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் என மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி ஒன்றியம் உரப்புளி மற்றும் வேந்தோணியில் வருடத்திற்கு 10 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களுக்கு மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து உரப்புளியில் மட்டும் 25 ஆயிரம் மரங்கள் குறுங்காடுகள் திட்டத்தில் வளர்க்கப்பட்டு உள்ளது.

இதன்படி வேங்கை, புங்கை, வாகை, பூவரசு, புளி, கொய்யா, சீதாப்பழ மரக்கன்றுகள் உள்ளன.முக்கியமாக அழிந்து வரும் அரிய வகை மர வகைகளான மஞ்சள் கடம்பு, பரம்பை, குமிழ் மரம், நட்டார், இஞ்சி, நாட்டு அத்தி, நறுவுலி, கருவாகை உள்ளிட்ட திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு ஏற்ப 133 மரவகைகள் நட்டு பராமரிக்க படுகிறது.மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுகின்றனர். மேலும் மழை வளம் பெருகி விவசாயம் பெருகவும், குறுங்காடுகள் திட்டம் மாவட்டத்தில் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X