வைகையில் சங்கமிக்கும் கழிவு: பூட்டப்பட்ட சுகாதார வளாகம்; பரமக்குடி நகராட்சியின் 9 வது வார்டு அவலம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள 9 வது வார்டில் பெருகியுள்ள கழிவுநீரால் மக்கள் கொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கின்றனர். பூட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை கழிப்பிடமாக்கும் அவலம் உள்ளது.பரமக்குடி எமனேஸ்வரம் செல்லும் தரைப்பாலம் தொடங்கி, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, வன்னிமரம் தெரு, கவுரி அம்மன்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள 9 வது வார்டில் பெருகியுள்ள கழிவுநீரால் மக்கள் கொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கின்றனர். பூட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை கழிப்பிடமாக்கும் அவலம் உள்ளது.

பரமக்குடி எமனேஸ்வரம் செல்லும் தரைப்பாலம் தொடங்கி, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, வன்னிமரம் தெரு, கவுரி அம்மன் கோயில் தெரு, ராஷ்டிரபதி தெரு, கன்னி சுந்தர்ராஜன் தெரு, எஸ்.எஸ். கோயில் தெரு என பல்வேறு குறுக்கு தெருக்களை இந்த வார்டு கொண்டுள்ளது.இந்த வார்டுக்குட்பட்ட வைகை கரையோரம் குப்பை கொட்டப்பட்டு ஆறு சுருங்கி வருகிறது. கரைய கழிவு நீர் வாறுகால்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது.

கழிவுகளால் கொசுத்தொல்லை

வார்டு மக்கள் கருத்து:காசிவிஸ்வநாதன், கவுரி அம்மன் கோயில் தெரு: எங்களது வார்டில் வைகை கரையோரத்தில் மின்விளக்குகளின்றி இரவு நேரங்களில் மது பிரியர்கள் பாராக பயன்படுத்துகின்றனர். பெண்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. ஆற்றின் கரையோரங்களில் நகராட்சி குப்பை தொட்டிகளை சுற்றி அள்ளப்படாத குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் விடப்படும் கழிவு நீரால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்க்கு ஆளாகின்றனர்.

திறக்கப்படாத சுகாதார வளாகம்

கண்ணன், கன்னி சுந்தர்ராஜன் தெரு: இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவில் திறக்கப்படாத சுகாதார வளாகத்தால் பெண்கள் அவதி அடைகின்றனர். மழை நேரங்களில் கவுரி அம்மன் கோயில் உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் கழிவுகளுடன் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். வாறு கால்களை முறைப்படுத்த நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

பாழடைந்த குடிநீர் தொட்டி

குணா, முன்னாள் கவுன்சிலர்: இங்கு நிரந்தர ஆணையர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால், சுகாதாரம் தொடங்கி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் கவுரி அம்மன் கோயில் முன்புள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 40 ஆண்டுகளை கடந்த நிலையில், அவ்வப்போது மராமத்து செய்து வருகின்றனர். ஆனால் தொட்டி உடையும் நிலையில் உள்ளதால் குடியிருப்பு பகுதிகளை விடுத்து ஆற்றங்கரையோரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X