ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தொடரும் அவலம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலங்கள் தொடர்கிறது.ஞாயிறன்று காலை 11:00 மணிக்கு மேல் பெரும்பாலான வார்டுகளில் நர்ஸ்கள் கூட பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தற்போது 250 மருத்துவர்கள்,400 நர்ஸ்கள் உள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகமான டாக்டர்கள்,நர்ஸ்களுக்கு விடுமுறை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலங்கள் தொடர்கிறது.

ஞாயிறன்று காலை 11:00 மணிக்கு மேல் பெரும்பாலான வார்டுகளில் நர்ஸ்கள் கூட பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தற்போது 250 மருத்துவர்கள்,400 நர்ஸ்கள் உள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகமான டாக்டர்கள்,நர்ஸ்களுக்கு விடுமுறை தரப்படுகிறது. உள் நோயாளிகளாக வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நேரத்தில் ஊசி போடுவது, ட்ரிப் ஏற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு வார்டுக்கு ஒரு நர்சாவது பணியில் இருக்க வேண்டும்.

ஆனால் ஞாயிறன்று பெண்கள் வார்டில் ஏழு நோயாளிகள் இருந்தனர். அதில் ஒருவர் விஷம் அருந்தி சிகிச்சையிலும், மற்றொரு பெண் வயிற்று வலியாலும் துடித்துக்கொண்டிருந்தார். ஒரு நோயாளிக்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக வைத்திருந்தும் காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வார்டுக்கு ஒரு நர்ஸ் கூட வரவில்லை.இதே நிலை தான் அருகில் உள்ள ஆண்கள் வார்டிலும் காணப்பட்டது.விடுமுறை நாட்களில் போதிய ஊழியர்கள் பணியில் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிகிச்சையில் இருப்போர் எதிர்பார்க்கின்றனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X