பொது செய்தி

தமிழ்நாடு

புதிய நபர்களிடம் பாதுகாத்துக்கொள்வது எப்படி? பெண் குழந்தைகளுக்கு கோவை போலீசார் அறிவுரை

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:அறிமுகமில்லாத நபர்கள், அந்நியர்கள் அழைத்தால், சத்தமிட்டபடி அங்கிருந்து ஓட வேண்டும் என, மாவட்ட போலீசார் குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.சமீபகாலமாக ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் வரும் அந்த சிறுமிக்கு, 12 வயதிருக்கும். வகுப்பு முடிந்ததால், பள்ளியை விட்டு வெளியில் வந்து கேட் அருகே பெற்றோர் வருகைக்காக காத்திருக்கிறார்.பெற்றோர்

கோவை:அறிமுகமில்லாத நபர்கள், அந்நியர்கள் அழைத்தால், சத்தமிட்டபடி அங்கிருந்து ஓட வேண்டும் என, மாவட்ட போலீசார் குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.சமீபகாலமாக ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் வரும் அந்த சிறுமிக்கு, 12 வயதிருக்கும். வகுப்பு முடிந்ததால், பள்ளியை விட்டு வெளியில் வந்து கேட் அருகே பெற்றோர் வருகைக்காக காத்திருக்கிறார்.பெற்றோர் வர தாமதம் ஏற்படுவதால், கேட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அதை பைக்கில் வரும் மர்மநபர் ஒருவர் நோட்டமிடுகிறார். பைக்கை நிறுத்தி விட்டு சிறுமியின் அருகில் வந்து, வீட்டுக்கு கூட்டி செல்ல வந்திருப்பதாக தெரிவிக்கிறார்.அவருடன் செல்ல மறுப்பு தெரிவிக்கும் சிறுமியை, கட்டாயப்படுத்தி அழைக்கிறார் அந்த மர்மநபர்.
ஒரு கட்டத்தில் அவரை நம்பாத சிறுமி, பள்ளியின் உள்ளே சென்று ஆசிரியரிடம் மர்மநபர் குறித்து கூறுகிறார்.வெளியில் வந்த ஆசிரியை மர்மநபர் யார் என விசாரிக்கிறார். அந்த மர்மநபர் அங்கிருந்து நைசாக நழுவி விடுகிறார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சிறுமியை பள்ளிக்குள் அழைத்து செல்கிறார்.இதுபோன்ற ஒரு தருணம் நம் குழந்தைகளுக்கு நேர்ந்தால், அந்த சிறுமி போல் சாதுர்யமாக செயல்பட நம் குழந்தைகளை தயார்படுத்த வேண்டியது அவசியம்; பள்ளி செல்லும் குழந்தைகளிடம் அந்நியர் யாராவது அழைத்தால், அவர்களை நம்பி ஏமாறக்கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கற்றுத்தர வேண்டியது கட்டாயம் என்கின்றனர் மாவட்ட போலீசார்.
போலீசார் கூறுகையில், 'அந்நியர்கள் யாராவது அழைத்தால் முதலில் கதறி அழக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.'ஆனால், அங்கிருந்து சத்தமிட்டுக் கொண்டே ஓட கற்றுத்தர வேண்டும். அருகிலிருப்பவர்கள் கவனித்து குழந்தைகளை காப்பாற்றுவர்' என்றனர்.ஆபத்து என்றால் அழைக்கலாம்181, 94981 81212, 77081 00100!அந்நியர்கள் யாராவது தொடர்ந்து தொல்லை கொடுத்தால், அதுகுறித்து பெற்றோரிடம் கூற வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் அம்மாவிடம் கண்டிப்பாக கூற வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால், 181, 94981 81212, 77081 00100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X