பொது செய்தி

தமிழ்நாடு

வைகை, பல்லவன் உட்பட 6 ரயில்கள் பாதியில் ரத்து

Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை-ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், வைகை, பல்லவன் உட்பட ஆறு ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.l மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, 20, 27ம் தேதிகளில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும். எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு, 20, 27ம் தேதி இயக்கப்படும் பல்லவன் ரயில், எழும்பூர் - விழுப்புரம் இடையே ரத்து

சென்னை-ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், வைகை, பல்லவன் உட்பட ஆறு ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.l மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, 20, 27ம் தேதிகளில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும். எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு, 20, 27ம் தேதி இயக்கப்படும் பல்லவன் ரயில், எழும்பூர் - விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதுl காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவ., 10ல் இயக்கப்படும் பல்லவன் ரயில் செங்கல்பட்டுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை ரயில், எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதுl ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலுக்கு 'பினாக்கினி எக்ஸ்பிரஸ்' இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வரும் 19, 26ம் தேதிகளில் இருவழியிலும், சென்ட்ரல் - கூடூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதுl புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படும் புதுடில்லி சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரயில், 20, 27 மற்றும் நவ., 10ல் பாதை மாற்றி, விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரயிலில், எழும்பூரில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்தவர்கள், பெரம்பூரில் இருந்து பயணம் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X