மாணவர் கிரிக்கெட் போட்டி: ஜாலி ரோவர்ஸ் அணி வெற்றி

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.குனியமுத்துார், எஸ்.கே. கிரிக்கெட் அகாடமி சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சுந்தராபுரம், பண்டிட் நேரு பள்ளி மைதானத்தில் நடக்கிறது.கோவை, மதுரை, திருப்பூர், நாமக்கல் பகுதிகளிலிருந்து, 12 அணிகள்

கோவை:மாநில அளவிலான கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.குனியமுத்துார், எஸ்.கே. கிரிக்கெட் அகாடமி சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சுந்தராபுரம், பண்டிட் நேரு பள்ளி மைதானத்தில் நடக்கிறது.கோவை, மதுரை, திருப்பூர், நாமக்கல் பகுதிகளிலிருந்து, 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'லீக்' முறையில் நடந்தன. ஐந்தாவது 'லீக்' போட்டியில், சாம் கிரிக்கெட் அகாடமி அணி, ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. முதலில் விளையாடிய சாம் சி.ஏ., அணி, 25.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 91 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ஜாலி ரோவர்ஸ் அணியினர், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16.2 ஓவரில், விக்கெட் இழப்பின்றி, 92 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் சிறப்பாக 'பேட்' செய்த ஜீவன்- 42 ரன் எடுத்தார்.போட்டியின் முடிவில், சிறந்த ஆட்டநாயகன் விருது ஜீவனுக்கு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X