ஆசிரியர் பணி தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பணி தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு

Added : அக் 11, 2021
Share
சென்னை-முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 31ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2020 - 21ம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் நிலை ஒன்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு வழியே நேரடி நியமனம் செய்ய, செப்., 9ல்

சென்னை-முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 31ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2020 - 21ம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் நிலை ஒன்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு வழியே நேரடி நியமனம் செய்ய, செப்., 9ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள், செப்., 18 முதல் பெறப்பட்டு வருகின்றன.

தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து, மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டிஉள்ளது. இதன் காரணமாகவும், பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்றும், ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி, 17ம் தேதியில் இருந்து 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X