மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி...

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:சரவணம்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், காரைக்குடி கே.எம் எப்.சி., அணி சாம்பியன் பட்டம் வென்றது.எஸ்.என்.எஸ்., டெக் அலுமினி எப்.சி., சார்பில், 13வது 'சேலஞ்சர் டிராபி'க்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்தது. 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. கோவை, காரைக்குடி, தென்காசி, வேலுார்,

கோவை:சரவணம்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், காரைக்குடி கே.எம் எப்.சி., அணி சாம்பியன் பட்டம் வென்றது.எஸ்.என்.எஸ்., டெக் அலுமினி எப்.சி., சார்பில், 13வது 'சேலஞ்சர் டிராபி'க்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்தது. 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. கோவை, காரைக்குடி, தென்காசி, வேலுார், ஈரோடு, ஊட்டி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், காரைக்குடி கே.எம் எப்.சி., அணி, கோவை கன்னர்ஸ் எப்.சி., அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில், 1-1 என்ற கோல் கணக்கில், டிராவில் முடிந்தது.பின்னர், 'பெனால்டி ஷூட் அவுட்' காரைக்குடி கே.எம் எப்.சி., அணி, 3-2 என்ற கோல் கணக்கில், கோவை கன்னர்ஸ் எப்.சி., அணியை வென்றது.போட்டியின் முடிவில், காரைக்குடி கே.எம் எப்.சி., அணி முதலிடம், கோவை கன்னர்ஸ் எப்.சி., அணி இரண்டாமிடம், எஸ்.என்.எஸ்., அணி மூன்றாமிடம் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X