ஐவர் கால்பந்து போட்டி: பாலக்காடு சி.எப்.சி., முதலிடம்

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, 17வயது பிரிவு இறுதிப்போட்டியில், பாலக்காடு சி.எப்.சி., அணி முதலிடத்தை தட்டி சென்றது.கோவை, சீரநாயக்கன்பாளையம், '4 ஸ்டேம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி' சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சீரநாயக்கன்பாளையத்தில் நடந்தது. வீரர்களுக்கான 14 வயது, 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. கோவை, கேரளா, திருப்பூர், ஊட்டி, தேனி,

கோவை:மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, 17வயது பிரிவு இறுதிப்போட்டியில், பாலக்காடு சி.எப்.சி., அணி முதலிடத்தை தட்டி சென்றது.கோவை, சீரநாயக்கன்பாளையம், '4 ஸ்டேம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி' சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சீரநாயக்கன்பாளையத்தில் நடந்தது. வீரர்களுக்கான 14 வயது, 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. கோவை, கேரளா, திருப்பூர், ஊட்டி, தேனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 39 அணிகள் பங்கேற்றன.14 வயதுக்கு உட்பட்ட இறுதிப்போட்டியில், போளுவம்பட்டி எப்.யூ எப்.சி., அணி, 4-2 என்ற கோல் கணக்கில், போத்தனுார் ஒய்.எப் எப்.சி., அணியை வென்றது.17 வயதுக்கு உட்பட்ட இறுதிப்போட்டியில், பாலக்காடு சி.எப்.சி., அணி, 3-1 என்ற கோல் கணக்கில், கேரளா சுதானி எப்.சி., அணியை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X