மண்டல கூடைப்பந்து: கோவை அணி 'டாப்'

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில், கோவை மாவட்ட மாணவர்கள் மற்றும் மாணவியர்என, இரண்டு அணிகளும் முதலிடத்தை தட்டி சென்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் ஈரோடு கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில் மண்டல அளவில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ஈரோட்டில் நடந்தது.கோவை, திருப்பூர், ஈரோடு,

கோவை:ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில், கோவை மாவட்ட மாணவர்கள் மற்றும் மாணவியர்என, இரண்டு அணிகளும் முதலிடத்தை தட்டி சென்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் ஈரோடு கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில் மண்டல அளவில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ஈரோட்டில் நடந்தது.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஊட்டியிலிருந்து அணிகள் பங்கேற்றன.மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், கோவை அணி, 85-81 என்ற புள்ளி கணக்கில், சேலம் அணியையும்; மாணவிகள் பிரிவில் கோவை அணி, 96-73 என்ற புள்ளி கணக்கில், சேலம் அணியையும் வென்றன.போட்டியில் முடிவில் மாணவர் பிரிவில் கோவை அணி முதலிடம், சேலம் அணி இரண்டாமிடம், நாமக்கல் அணி மூன்றாமிடம் பிடித்தன. மாணவிகள் பிரிவில் கோவை அணி முதலிடம், சேலம் அணி இரண்டாமிடம், ஈரோடு அணி மூன்றாமிடம் பிடித்தன. முதல், இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X