அரசியல் செய்தி

தமிழ்நாடு

'2 லட்சம் டன் நிலக்கரி இருக்கு':செந்தில் பாலாஜி

Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை தலைமை செயலகத்தில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 41 சதவீதம் அனல் மின் நிலையங்கள் வாயிலாக பூர்த்தியாகிறது. மின் வாரிய அனல் மின் நிலையங்களில் இருந்து தினமும், 3,300 - 3,350 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தனியார் அனல் மின் நிலையங்களில் இருந்து 2,830 மெகா வாட் பெறப்பட்டு வந்த நிலையில், மழையால் நிலக்கரி

சென்னை-சென்னை தலைமை செயலகத்தில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 41 சதவீதம் அனல் மின் நிலையங்கள் வாயிலாக பூர்த்தியாகிறது. மின் வாரிய அனல் மின் நிலையங்களில் இருந்து தினமும், 3,300 - 3,350 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தனியார் அனல் மின் நிலையங்களில் இருந்து 2,830 மெகா வாட் பெறப்பட்டு வந்த நிலையில், மழையால் நிலக்கரி வரத்து குறைவு, அவற்றின் விலை உயர்வு போன்ற காரணங்களால், தற்போது 1,300 மெகா வாட் தான் கிடைக்கிறது.மத்திய தொகுப்பில் இருந்து தினமும் 4,000 மெகா வாட் வரை மின்சாரம் பெறப்படுகிறது. தமிழகத்தில் மின் உற்பத்திக்கான நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை. நான்கு நாட்களுக்கு தேவையான 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X