சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற இருவர் கைது

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை, சாய்பாபாகாலனி அருகே கல்லுாரி முன் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள டீக்கடையில் கஞ்சாவை பதுக்கி

கோவை:கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை, சாய்பாபாகாலனி அருகே கல்லுாரி முன் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள டீக்கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தேனி, மேலமங்கலத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மொபைல்போன், பணம் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.இதேபோன்று திருகோவில் நகர் அருகே, நேற்று முன்தினம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சியாம் ராகுல், 25 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மொபைல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X