பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு போட்டித்தேர்வு; இலவச பயிற்சிக்கு அறிவிப்பு

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (எஸ்.எஸ்.சி., ) பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டம் பெற்றவர்களுக்கான, 'பேஸ் 9 பிராஜக்ட் உதவியாளர் ' பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான இலவச பயிற்சி, மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் இணையவழியில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:'பேஸ் 9 பிராஜக்ட் உதவியாளர்'

கோவை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (எஸ்.எஸ்.சி., ) பத்தாம் வகுப்பு, பிளஸ்2, பட்டம் பெற்றவர்களுக்கான, 'பேஸ் 9 பிராஜக்ட் உதவியாளர் ' பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான இலவச பயிற்சி, மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் இணையவழியில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:'பேஸ் 9 பிராஜக்ட் உதவியாளர்' பிரிவின் கீழ் நாடு முழுவதும், 3261 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம், 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.குறிப்பிட்ட பிரிவினருக்கு விதிமுறைப்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.தேர்வு குறித்த விபரங்களை, https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இதில் குழு விவாதம், மாதிரி தேர்வு, பாடவாரியாக பயிற்சி, பாடக்குறிப்புகள் இணையதளம் வாயிலாகவே பகிரப்படும். பயிற்சி வகுப்பு குறித்து அறிந்துகொள்ள, 9499055938 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X