இன்ஜினியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இன்ஜினியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு'

Added : அக் 11, 2021
Share
கோவை:''சமூகத்தில் இன்ஜினியர்களுக்கு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு உள்ளது,'' என்று, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.கண்ணம்பாளையத்தில் உள்ள, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி தலைமை வகித்தார்.இளநிலை, முதுநிலை இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்வி பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி,
 'இன்ஜினியர்களுக்கு  சிறந்த வேலை வாய்ப்பு'

கோவை:''சமூகத்தில் இன்ஜினியர்களுக்கு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு உள்ளது,'' என்று, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.கண்ணம்பாளையத்தில் உள்ள, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி தலைமை வகித்தார்.இளநிலை, முதுநிலை இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்வி பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்,''சமூகத்தில் இன்ஜினியர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு உள்ளது. அதை, திறமைகளை வளர்த்துக் கொண்டு, பெற்றுக்கொள்ள வேண்டும். திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு உள்ளது. மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை இழக்காமல், கல்வி எனும் கருவியை பயன்படுத்தினால், வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்,'' என்றார்.கல்லுாரி துணை தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ்காந்தி, துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X