பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.77 கோடி நிலுவை வாடகை வசூல்: மாநகராட்சி வருவாய் பிரிவினர் அதிரடி

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் நடத்துவோரிடம் இருந்து, ரூ.2.77 கோடி நிலுவை வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில், 'ஆப்டிக் பைபர் கேபிள்' (கண்ணாடி இழை வடம்) அமைத்ததற்கான தட வாடகை கட்டணம், 2016-17 முதல், 2020-21 வரை, ரூ.1.73 கோடியை ஏர்டெல் நிறுவனமும், 2018-19 முதல், 2021-22 வரை, ரூ.9.48 கோடியை ஜியோ டிஜிட்டல் நிறுவனமும் செலுத்தாமல் நிலுவையில்

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் நடத்துவோரிடம் இருந்து, ரூ.2.77 கோடி நிலுவை வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில், 'ஆப்டிக் பைபர் கேபிள்' (கண்ணாடி இழை வடம்) அமைத்ததற்கான தட வாடகை கட்டணம், 2016-17 முதல், 2020-21 வரை, ரூ.1.73 கோடியை ஏர்டெல் நிறுவனமும், 2018-19 முதல், 2021-22 வரை, ரூ.9.48 கோடியை ஜியோ டிஜிட்டல் நிறுவனமும் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தன.
வரியில்லாத இனங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வசூலிக்க, வருவாய் பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, எடுத்த நடவடிக்கையால், ஏர்டெல் நிறுவனம் ரூ.1.73 கோடி, ஜியோ டிஜிட்டல் நிறுவனம் ரூ.9 கோடி செலுத்தியுள்ளன.மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடை நடத்துவோரில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கும் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
தியாகி குமரன் மார்க்கெட், தொட்டராயன் கோவில் வீதி, பட்டேல் ரோடு, அவிநாசி ரோடு கடைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாக கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் விளைவாக, நிலுவை வாடகை வகையில் ரூ.2.77 கோடி வசூலாகியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X