கோல்கட்டா நாயகன் நரைன்! *கோஹ்லி அணியை வெளியேற்றினார்

Updated : அக் 11, 2021 | Added : அக் 11, 2021
Share
Advertisement
சார்ஜா : ஐ.பி.எல்., தொடரில் இருந்து மீண்டும் வெறுங்கையுடன் வெளியேறியது கோஹ்லியின் பெங்களூரு அணி.நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் சுனில் நரைன் சுழல் 'சூறாவளியில்' சிக்கி, கோல்கட்டாவிடம் 4 விக்கெட்டில் வீழ்ந்தது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பெற்ற கோஹ்லியின்

சார்ஜா : ஐ.பி.எல்., தொடரில் இருந்து மீண்டும் வெறுங்கையுடன் வெளியேறியது கோஹ்லியின் பெங்களூரு அணி.



latest tamil news


நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் சுனில் நரைன் சுழல் 'சூறாவளியில்' சிக்கி, கோல்கட்டாவிடம் 4 விக்கெட்டில் வீழ்ந்தது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பெற்ற கோஹ்லியின் பெங்களூரு, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்
பெங்களூரு அணிக்கு கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 5 ஓவரில் 49 ரன் எடுத்து வலுவான இலக்கை நோக்கி முன்னேறியது. இந்நிலையில் 18 பந்தில் 21 ரன் எடுத்த படிக்கல், பெர்குசன் 'வேகத்தில்' போல்டாக, நிலைமை அப்படியே தலைகீழானது. அடுத்து வந்த ஸ்ரீகர் பரத், வருண் சக்ரவர்த்தி பந்தில் தினேஷ் கார்த்திக் தயவில் தப்பினார்.
நரைன் 'சுழல்'
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத இவர் 16 பந்தில் 9 ரன் மட்டும் எடுத்து, சுனில் நரைன் 'சுழலில்' சிக்கினார். அடுத்து கோஹ்லியும் (39), நரைனிடம் சரண் அடைந்தார். தொடர்ந்து அசத்திய நரைன், டிவிலியர்ஸ் (11), மேக்ஸ்வெலை (18 பந்து, 15 ரன்) வெளியேற்றினார். ஷாபாஸ் நதீம் (13), கிறிஸ்டியன் (9) நிலைக்கவில்லை.பெங்களூரு அணியின் இன்னிங்சில் நேற்று ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. 20 ஓவரில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன் மட்டும் எடுத்தது. ஹர்ஷல் படேல் (8), கார்டன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் நரைன் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.


latest tamil news



எளிய இலக்கு
எளிய இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் (29) 'சூப்பர்' துவக்கம் கொடுத்தது. திரிபாதி (6), வெங்கடேஷ் (26) அடுத்தடுத்து அவுட்டாக, பெங்களூரு அணி பக்கம் வெற்றி திரும்பும் என நம்பப்பட்டது. மாறாக கிறிஸ்டியன் வீசிய 12வது ஓவரில் 3 சிக்சர் அடித்த நரைன் (26), போட்டியை மீண்டும் கோல்கட்டா பக்கம் கொண்டு சென்றார். தினேஷ் கார்த்திக் (10) ஏமாற்றிய போதும், கோல்கட்டா அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்று, தகுதிச்சுற்று 2க்கு முன்னேறியது. மார்கன் (5), சாகிப் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
டில்லியுடன் மோதல்
நேற்று 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற கோல்கட்டா அணி, நாளை நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில், டில்லி அணியுடன் மோதும். இதில் வெல்லும் அணி அக். 15ல் துபாயில் நடக்கும் பைனலில் சென்னையை சந்திக்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X