பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:தமிழக- கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏழாயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, கால்நடை பராமரிப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் மார்ச் அல்லது செப்., மாதத்தில் கோமாரிநோய் தடுப்பூசி செலுத்துவது வழக்கம். கொரோனாவால் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிப்போனது.

கோவை:தமிழக- கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏழாயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, கால்நடை பராமரிப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் மார்ச் அல்லது செப்., மாதத்தில் கோமாரிநோய் தடுப்பூசி செலுத்துவது வழக்கம். கொரோனாவால் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிப்போனது. கேரளாவிலிருந்து கோமாரி நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி, முள்ளி, மேல்பாவி, வேலந்தாவளம், வாளையாறு உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலுள்ள, ஏழாயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.மற்ற பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு, தடுப்பூசி போட தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். கால்நடைகளை வளர்ப்பவர்கள் மழை காலங்களில் தொற்று பரவாமலும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாடுகளை மேயவிடாமலும் பாதுகாக்க வேண்டும்.நார்ச்சத்து அதிகமுள்ள தீவனங்களை கொடுக்க வேண்டும். பசுந்தீவன அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். குளிர்த்த தண்ணீரை அதிகம் கொடுக்க வேண்டாம்.இவ்வாறு, பெருமாள் சாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X