பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி உற்சவ விழா

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா கடந்த, 7ம் தேதி துவங்கியது. தினமும் காலை, 7:00 மணி முதல் வேள்வி, 8:00 முதல் அபிஷேகம் என பல்வேறு நிகழ்ச்சிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்து வருகின்றன.சரஸ்வதி அலங்காரம், மகாலட்சுமி அலங்காரம், துர்கா அலங்காரம் உள்ளிட்ட தெய்வங்களை அடுத்து நேற்று காமாட்சி அம்மனுக்கு

கோவை:கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா கடந்த, 7ம் தேதி துவங்கியது. தினமும் காலை, 7:00 மணி முதல் வேள்வி, 8:00 முதல் அபிஷேகம் என பல்வேறு நிகழ்ச்சிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்து வருகின்றன.சரஸ்வதி அலங்காரம், மகாலட்சுமி அலங்காரம், துர்கா அலங்காரம் உள்ளிட்ட தெய்வங்களை அடுத்து நேற்று காமாட்சி அம்மனுக்கு சிறப்புஅலங்காரம் நடந்தது. வேள்வி, அபிஷேகம், அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். வரும், 15ம் தேதி வரை மணிமாரியம்மன், மணிகாளியம்மன், மணி ராஜராஜேஸ்வரி, அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X