பொது செய்தி

தமிழ்நாடு

சினிபிட்ஸ்

Added : அக் 11, 2021
Share
Advertisement
நெடுமுடி வேணு மறைவு பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு, 73, உடல் நலக்குறைவால் நேற்று திருவனந்தபுரத்தில் காலமானார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழில், இந்தியன், அன்னியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியன் - 2 பாகத்திலும் நடித்து வந்தார்.மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சமீபத்தில், கொரோனா தொற்றால் பாதித்து மீண்டு வந்த இவர்,
 சினிபிட்ஸ்

நெடுமுடி வேணு மறைவு பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு, 73, உடல் நலக்குறைவால் நேற்று திருவனந்தபுரத்தில் காலமானார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழில், இந்தியன், அன்னியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியன் - 2 பாகத்திலும் நடித்து வந்தார்.மூன்று முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சமீபத்தில், கொரோனா தொற்றால் பாதித்து மீண்டு வந்த இவர், நேற்று முன்தினம் உடல் நலம் சரியின்றி, திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஓ.டி.டி.,யில் 'ஓ மணப்பெண்ணே'அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள, ஓ மணப்பெண்ணே படம் நேரடியாக, ஓ.டி.டி.,யில் வரும் 22ல் வெளியாகிறது. தெலுங்கு படமான பெல்லி சூப்பலு படத்தின் ரீமேக்காக ஓ மணப்பெண்ணே படம் உருவாகியுள்ளது.வரும், 30ல் வெளியாகுது இசைஜே.எம்.பஷீர் நடித்து, தயாரிக்கும் தேசிய தலைவர் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இசையை, தேவர் ஜெயந்தியான வரும், 30ல் வெளியிட, சமீபத்தில் இளையராஜாவுடன் படக்குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். விழாவை பசும்பொன்னில் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.'த்ரில்லிங்' கதைகலைமகன் முபாரக் தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கும், இடி முழக்கம் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், காயத்ரி, சுபிக் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின், 'டப்பிங்'கை, காயத்ரி சமீபத்தில் முடித்தார். அவர் கூறுகையில், ''த்ரில்லிங்கான கதை. இப்படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. மொத்த படக்குழுவுக்கும் நன்றி'' என்றார்.------------'பிக்பாஸை' கைவிட்ட நடிகர்சார்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், பிசாசு - 2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். 'பிக்பாஸ் சீசன் - 5'ல் பங்கேற்க சந்தோஷுக்கு அழைப்பு வந்தது. அவரும் அதை ஏற்று செல்ல நினைத்தார். இது பற்றி மிஷ்கினிடம் கூற, அவரோ, 'பிசாசு - 2 படம் வெளியாகப் போகிறது. இந்த நேரத்தில் அங்கு சென்றால் எப்படி; கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றால், பிசாசு - 2 படத்தில் உங்கள் பகுதியை குறைப்பதை தவிர வேறு வழியில்லை' என்று கூறியுள்ளார். இதனால், பிக்பாஸை சந்தோஷ் கைவிட்டுள்ளார்.தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, விளம்பரம் தொடர்பாக சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே, கால் பக்க அளவு விளம்பரம் தர வேண்டும் என்றும், 'பேனர்'களை தியேட்டரில் மட்டுமே வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.அதை மட்டும் சொல்லாதீங்க!ஆர்யா, ராசிகண்ணா, சுந்தர்.சி, விவேக், யோகிபாபு நடித்த, அரண்மனை - 3 படம் வரும், 14ல் வெளியாகிறது. படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது:இப்படத்தை, குஜராத்தில் உள்ள நிஜ அரண்மனையிலேயே படமாக்கினோம். அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகம், 15 வரை வர வாய்ப்புள்ளது. என் படம் மக்களை மகிழ்விக்கும் வகையிலேயே இருக்கும். எந்த கருத்தும் சொல்ல நான் வரவில்லை. படத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால், மொத்த கதையையும் சொல்லி விடாதீர்கள். மறைந்த நடிகர் விவேக், இப்படத்தில் நடித்துள்ளார். இறப்பதற்கு முந்தைய நாள் வரை என்னிடம் ஆர்வமாக பேசினார். அவரை இழந்தது மிகவும் வருத்தம்.இவ்வாறு அவர் கூறினார்.'த்ரில்லிங்' கதைகலைமகன் முபாரக் தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கும், இடி முழக்கம் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், காயத்ரி, சுபிக் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின், 'டப்பிங்'கை, காயத்ரி சமீபத்தில் முடித்தார். அவர் கூறுகையில், ''த்ரில்லிங்கான கதை. இப்படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. மொத்த படக்குழுவுக்கும் நன்றி'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X