பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் இழப்பீடு தேவை: கலெக்டரிடம் மக்கள் மனு

Added : அக் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:சின்னியம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் விமானநிலைய விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு, தற்போதைய சூழல் அடிப்படையில், ஒரு சதுர அடிக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர் கூட்டத்தில், கலெக்டர் சமீரனிடம் அளித்த மனுவில், 'கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதுர அடிக்கு, 1,500 ரூபாய் விலை

கோவை:சின்னியம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் விமானநிலைய விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு, தற்போதைய சூழல் அடிப்படையில், ஒரு சதுர அடிக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர் கூட்டத்தில், கலெக்டர் சமீரனிடம் அளித்த மனுவில், 'கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதுர அடிக்கு, 1,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, ஒரு சதுர அடி 4,500க்கு விற்பனையாகிறது. அரசு நிர்ணயித்த பழைய இழப்பீட்டு தொகையில் வீடு, நிலம் வாங்க முடியாத சூழல் உள்ளது.கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ளவர்களில் பலர் தற்போது தான், வீட்டு மீது பெற்ற வங்கி கடனை அடைத்துள்ளனர். தற்போதைய மதிப்பில் விலை நிர்ணயித்து இழப்பீடு வழங்கியும், அருகிலேயே மாற்று இடம் ஒதுக்கியும் தர வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
12-அக்-202112:19:03 IST Report Abuse
suresh kumar எப்படியும் இவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கும் அடுத்த தலைமுறையினருக்காவது இந்த வழக்கின் முடிவு தெரிந்து விடுமென்று நம்புவோம் இவர்கள் சாதாரண இந்திய பிரஜைகள். சஞ்சய்தத் சல்மான்கான் போன்ற முக்கியஸ்த்தர்களில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X