சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவேறு சாலை விபத்து: இரண்டு பேர் பலி

Added : அக் 11, 2021
Share
Advertisement
கோவை:பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பண்ணாரி; இவரது மனைவி பாப்பா, 45. இவர் நேற்று முன்தினம் மகன் மதன்குமார், 21 என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். காந்திபுரம், நுாறடி ரோடு மேம்பாலத்தில் பைக் சென்றபோது திடீரென பாப்பா கீழே ரோட்டில் விழுந்தார்.தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடியவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்து

கோவை:பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பண்ணாரி; இவரது மனைவி பாப்பா, 45. இவர் நேற்று முன்தினம் மகன் மதன்குமார், 21 என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். காந்திபுரம், நுாறடி ரோடு மேம்பாலத்தில் பைக் சென்றபோது திடீரென பாப்பா கீழே ரோட்டில் விழுந்தார்.தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடியவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதேபோன்று ராமநாதபுரம், ரூபா நகரை சேர்ந்தவர் ஜோஸ், 60. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பைக், மொபட் மீது மோதியது. ரோட்டில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், முதியவர் உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X