பொது செய்தி

தமிழ்நாடு

உரம் வினியோகம் கூட்டுறவு துறை உத்தரவு

Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை-விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தடையின்றி வழங்குமாறு, கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக கூட்டுறவு விற்பனை இணையமானது, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்கிறது. அவற்றின் விலை வெளிச்சந்தையை
 உரம் வினியோகம் கூட்டுறவு துறை உத்தரவு

சென்னை-விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தடையின்றி வழங்குமாறு, கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு விற்பனை இணையமானது, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்கிறது. அவற்றின் விலை வெளிச்சந்தையை விட சற்று குறைவாக உள்ளது. தற்போது, பருவ மழை சீசன் துவங்கிய நிலையில், விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உரங்களை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.சில கூட்டுறவு சங்கங்களிலும், அதன் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள், உரங்களை வாங்க செல்லும் போது, தட்டுப்பாட்டை காரணம் காட்டி திருப்பி அனுப்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து, விவசாயிகளை அலைக்கழிக்காமல் அனைத்து வகை உரங்களையும் தடையின்றி வழங்குமாறு, கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சங்கங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டு, உர வினியோகத்தில் தனி கவனம் செலுத்தி, குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X