தமிழ்நாடு

'ஜல்ஜீவன்' திட்ட பயனாளிகள் நெகிழ்ச்சி: இப்பதான் 'ஜீவன்' வந்தது! இனி அலைய வேண்டாம் தண்ணீர் தேடி!

Updated : அக் 12, 2021 | Added : அக் 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை:'கோடை காலத்தில் வறண்டு போகும் ஆற்றுப்பாதையில், யானைக்கூட்டத்துக்கு அஞ்சி தண்ணீர் எடுக்கச் சென்ற நிலைக்கு, மத்திய அரசின் திட்டத்தால் தீர்வு கிடைத்துள்ளது' என்று 'ஜல்ஜீவன்' திட்ட பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.கிராம மக்கள் அனைவருக்கும் 2024ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ஜல்ஜீவன்' திட்டத்தை மத்திய
'ஜல்ஜீவன்' திட்ட பயனாளிகள் நெகிழ்ச்சி: இப்பதான் 'ஜீவன்' வந்தது! இனி அலைய வேண்டாம் தண்ணீர் தேடி!

கோவை:'கோடை காலத்தில் வறண்டு போகும் ஆற்றுப்பாதையில், யானைக்கூட்டத்துக்கு அஞ்சி தண்ணீர் எடுக்கச் சென்ற நிலைக்கு, மத்திய அரசின் திட்டத்தால் தீர்வு கிடைத்துள்ளது' என்று 'ஜல்ஜீவன்' திட்ட பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.கிராம மக்கள் அனைவருக்கும் 2024ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ஜல்ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இத்திட்டப்படி, 29,525 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தொண்டாமுத்துார் ஒன்றியம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி சர்க்கார் போராத்தி கிராமத்தில் வசிக்கும் 16 குடும்பத்தினருக்கு, ஜல்ஜீவன் திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வளவு காலம் குடிநீருக்கு சிரமப்பட்டு வந்த கிராம மக்கள், அரசின் இத்திட்டத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கள் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியுடன் நம்முடன் பகிர்ந்து கொண்டனர் சிலர்.செல்வி, குடும்பதலைவி தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கி ஒரு வாரம் ஆகிறது.
இதற்கு முன் தண்ணீருக்காக ஆற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. முக்கால் கிலோமீட்டர் துாரம் செல்ல வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே தண்ணீர் இருக்கும். ஆறு வறண்டு போகும் காலங்களில் இன்னும் சிரமம். அந்த நிலைக்கு இப்போது முடிவு ஏற்பட்டுள்ளது.
மாரியம்மாள், குடும்பத்தலைவிவெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்து ஆற்றில் வரும் தண்ணீரை நம்பித்தான், இத்தனை ஆண்டு காலம் பிழைத்திருந்தோம். ஆற்றுக்கு போய் தண்ணீர் கொண்டு வருவதும் அத்தனை சுலபமில்லை. காட்டு யானைகளுக்கு அஞ்சித்தான் போய் வரவேண்டியிருக்கும். இப்போது எங்கள் வாசலுக்கே குழாய் வந்து விட்டது.
மிகவும் சந்தோஷம்.
ரங்கன், விவசாயி ஆற்றுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருவதில் ஊர் மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மழை, வெயில் நேரங்களில் பெரும் திண்டாட்டமாக இருக்கும். ஒரு கிலோமீட்டர் துாரம் நடந்து சென்று, தண்ணீர் கொண்டு வந்தவர்கள், இப்போது வீட்டு வாசலில் குடிநீர் குழாய் போட்டபோது, அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மரகதம், குடும்பத்தலைவி எங்களுக்கு எந்த செலவும் இல்லாமல், குடிநீர் இணைப்பு வீட்டுக்கு வீடு போட்டுக் கொடுத்துள்ளார்கள்.
குடம் வைத்து தண்ணீர் பிடிப்பது போல வசதியும் செய்து தந்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யானைக்கு பயந்து தண்ணீர் தேடிச் சென்ற பிரச்னைக்கு முடிவு வந்து விட்டது.அய்யாசாமி, விவசாயிஇத்தனை ஆண்டு காலம் கிராம மக்கள் தண்ணீருக்காக ஆற்றுக்கு போய் கொண்டிருந்தனர். மழை காலங்களில் பெரும் சிரமம். அரசு திட்டத்தால் எங்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
12-அக்-202120:49:13 IST Report Abuse
Ambika. K ஜல் ஜீவன் தண்ணிய குடிச்சுட்டு பிஜேபி வந்துடும்னு பயந்து திமுக விற்கு ஒட்டு போடும் கும்பல். தமிழன்டா
Rate this:
Cancel
ellar - New Delhi,இந்தியா
12-அக்-202119:48:45 IST Report Abuse
ellar பாஜக இவ்வாறு செய்யும் திட்டங்களுக்கு பலன் கிடைக்க இவைபற்றி பேச வேண்டும். அத்துடன் ஒவ்வொரு திட்டத்திற்கு உள்ளூர் பாஷையில் பெயர் வைக்க வேண்டும்
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
12-அக்-202117:36:19 IST Report Abuse
T.sthivinayagam வருங்காலத்தில் இதையும் தனியாரிடம் கொடுத்து விட்டு, நல்ல ஜல் வேண்டும் என்றால் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லாமல் இருந்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X