குப்பைத்தொட்டிதான் நகரின் முக்கிய பிரச்னை!

Added : அக் 11, 2021
Share
Advertisement
ஓரிரு இடங்கள்ல இருக்கு...இருந்தாலும் அது ஓட்டையா இருக்குவீதியை சுத்தம் செய்யணும்இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, காமாட்சிபுரம், ராமசந்திரநாயுடு வீதியில், சிதிலமடைந்த கம்பம் அகற்றி, புது கம்பம் அமைக்கப்பட்டது. பழைய கம்பத்தை, எடுத்துச் செல்லாமல், வீதியிலேயே உடைத்து வீசி சென்றுள்ளனர். இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.- கல்யாணி, ராமசந்திரநாயுடு வீதி.,வாகன ஓட்டிகள்

ஓரிரு இடங்கள்ல இருக்கு...இருந்தாலும் அது ஓட்டையா இருக்கு

வீதியை சுத்தம் செய்யணும்இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, காமாட்சிபுரம், ராமசந்திரநாயுடு வீதியில், சிதிலமடைந்த கம்பம் அகற்றி, புது கம்பம் அமைக்கப்பட்டது. பழைய கம்பத்தை, எடுத்துச் செல்லாமல், வீதியிலேயே உடைத்து வீசி சென்றுள்ளனர். இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.- கல்யாணி, ராமசந்திரநாயுடு வீதி.,

வாகன ஓட்டிகள் அவதிமேட்டுப்பாளையம் ரோடு, காரமடை யூனியன் அலுவலகம் அருகே, சாலையில் குவிந்துள்ள, மணலால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இம்மணல் குவியலை அகற்ற வேண்டும்.- சதீஷ்குமார், காரமடை.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி - வலியாம்பாளையம் ரோடு ரத்தினகிரி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார் வார வேண்டும்.- ரகு, ரத்தினகிரி வீதி.

ராமானுஜ நகரில் தலைக்கு மேல் ஆபத்து!சிங்காநல்லுார் - ேஹாப்ஸ் செல்லும், காமராஜ் ரோடு, ராமானுஜ நகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரையின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள, விளம்பர பலகை சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.- பாலு, ராமானுஜ நகர்.

பார்க் அருகில் பார்க்க சகிக்கல!மாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, மீனா எஸ்டேட்டில் உள்ள, பார்க் அருகில், காய்ந்த மரக்கிளைகள் குவிந்துள்ளன. இதன் அருகிலேயே இப்பகுதி மக்கள் குப்பை கொட்டுகின்றனர். இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, ஏற்ற இடத்தில், குப்பை தொட்டியும் வைக்க வேண்டும்.- செல்லையா, மீனா எஸ்டேட்.

பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டிமாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையத்தில் உள்ள, மேல் நிலை நீர் தேக்க தொட்டி, பராமரிப்பின்றி உள்ளது. இதில், செடி கொடிகள் வளர்ந்து, தொட்டி சேதமடைந்து வருகிறது. இவற்றை அகற்றிவிட்டு, சேதமடைந்த இடத்தை சீரமைக்க வேண்டும். தொட்டியை முறைப்படி பராமரிக்க வேண்டும்.- முத்துகுமார், வெள்ளலுார் ரோடு.

பள்ளி அருகே கொட்டுறாங்க குப்பைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் அடுத்த, கே.வி.கே., நகரில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், குவிந்துள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், குடியிருப்பு பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- கிருஷ்ணவேலு, கே.வி.கே., நகர்

சாலையெல்லாம் ஓடுது சாக்கடை கழிவுநீர்மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட, நேரு நகரில், பிரதான சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது. - ரேகா, நேரு நகர்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 64வது வார்டுக்கு உட்பட்ட, உப்பிலிபாளையம் முதல் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- சூரியா, உப்பிலிபாளையம்.

குப்பை குவியல்மேட்டுப்பாளையம் ரோடு, குரும்பபாளையம், ஜங்கம்மநாயக்கன்பாளையம், ஹரி கார்டன் பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கார்த்திக், ஹரி கார்டன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X