அஞ்சல் துறையில் 97 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் துறையில் 97 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது

Added : அக் 11, 2021
Share
சென்னை-கொரோனா தொற்று காலத்திலும், கடமை உணர்வுடன் சிறப்பாக சேவையாற்றிய அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள், 97 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறையினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில் நடந்த இந்த விழாவில்,
 அஞ்சல் துறையில் 97 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது

சென்னை-கொரோனா தொற்று காலத்திலும், கடமை உணர்வுடன் சிறப்பாக சேவையாற்றிய அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள், 97 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறையினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில் நடந்த இந்த விழாவில், அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள், 97 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழக தலைமை அஞ்சல்துறை தலைவர் செல்வகுமார் வழங்கி பேசியதாவது:நாடு முழுதும், 1.67 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆதார், பாஸ்போர்ட் சேவைகள்; மின்கட்டணம், போக்குவரத்து போலீசார் விதிக்கும் அபராத கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் தமிழக அஞ்சல்துறை, 1,075 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.

விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலர்ஷம்பு கல்லோலிகர் பேசியதாவது:கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள், அஞ்சல் மற்றும் வங்கி துறையில் விரும்பி பணியில் சேர்ந்தனர்.

அந்த காலகட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்புகள் குறைவாக இருந்தன.இன்றைக்கு தகவல் தொடர்புக்கு உதவும் சமூக வலைதளங்களான, இ - மெயில், முகநுால் உள்ளிட்டவை, அஞ்சல்துறைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளன. எனவே, இவற்றை சமாளிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என, சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அஞ்சல் துறை முகவர்கள், சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வர்த்தகப் பிரிவு அஞ்சல் துறை தலைவர் வீணா ஸ்ரீனிவாஸ் வரவேற்றார். மதுரை மண்ட அஞ்சல் துறை தலைவர் நடராஜன், அஞ்சல்துறை நிதி பிரிவு பொதுமேலாளர் அனிதா, அஞ்சல் சேவைகள் இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X