பொது செய்தி

தமிழ்நாடு

ஈரப்பதம் அறிய நவீன கருவிகள்

Added : அக் 11, 2021
Share
Advertisement
சென்னை-நெல்லில் உள்ள ஈரப்பத அளவை துல்லியமாக அறிய, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் நவீன கருவிகளை வாங்க உள்ளது.மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இம்மாதம், 1ம் தேதி துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன் 2022 செப்டம்பரில் முடிவடைகிறது. மத்திய அரசு, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க அனுமதி

சென்னை-நெல்லில் உள்ள ஈரப்பத அளவை துல்லியமாக அறிய, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் நவீன கருவிகளை வாங்க உள்ளது.

மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இம்மாதம், 1ம் தேதி துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன் 2022 செப்டம்பரில் முடிவடைகிறது. மத்திய அரசு, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க அனுமதி அளித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், நெல்லில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதனால், 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஜனவரியில் வரும் பொங்கல் அறுவடைக்கு பின் தான், நெல் கொள்முதல் அதிகரிக்கும். இதனால், அதற்கான ஏற்பாடுகளில் வாணிபக் கழகம் தயாராகி வருகிறது.எனவே, நெல்லின் ஈரப்பதத்தை துல்லியமாக கண்டறிய, 'யுனிவர்சல் டிஜிட்டல் மாய்ஷர் மீட்டர்' எனப்படும் நவீன கருவிகள், ௫௦௦ வாங்கப்பட உள்ளன. நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு, நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் கண்டறியப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X