சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி வழக்கில் ஓராண்டாக தேடப்பட்ட குற்றவாளி கைது

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை-தொழில் அதிபரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து, ஓராண்டாக தலைமறைவானவர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் ஜெட்டா நகரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த முகமதுமுஸ்கின், 28, என்பவர்,தொழில் விசாவில்

சென்னை-தொழில் அதிபரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து, ஓராண்டாக தலைமறைவானவர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் ஜெட்டா நகரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த முகமதுமுஸ்கின், 28, என்பவர்,தொழில் விசாவில் வந்திருந்தார். அவரது ஆவணங்களை சோதனை செய்த போது, மும்பை போலீசாரால் ஓராண்டாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரியவந்தது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், தொழில் ரீதியாக கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்து, முகமது முஸ்கின் தலைமறைவாகி உள்ளார். மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடிய போது வெளிநாட்டிற்கு தப்பினார்.முகமது முஸ்கினை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, மும்பை போலீசார் அறிவித்தனர். ஓராண்டாக சவுதி அரேபியாவில் தலைமறைவாக இருந்த அவர், தொழில் விஷயமாக இந்தியா வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.இது குறித்து, மும்பை போலீசுக்கு குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சென்னை வந்து, முகமது முஸ்கினை, மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X