பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாட்டம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்போரூர் : திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், நேற்று கொண்டாடப்பட்டது.பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களது திறமைகள், படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், அக்., 11ம் தேதி, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
 சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாட்டம்

திருப்போரூர் : திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், நேற்று கொண்டாடப்பட்டது.

பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களது திறமைகள், படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், அக்., 11ம் தேதி, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இத்தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமசந்திரன் பங்கேற்றார்.இவர், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், பெண் சிசுகொலை தடுத்தல், குழந்தை திருமணம் தவிர்த்தல், பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை குறித்து, விரிவாக விளக்கினார்.'பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்போம்' என்பதை வலியுறுத்தி, அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X