அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., முதலாம் ஆண்டு 25ல் வகுப்புகள் துவக்கம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை-''தமிழக பொறியியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், 25ம் தேதி துவக்கப்படும்,'' என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை, இரண்டு கட்டம் நிறைவடைந்துள்ளது. முதல் சுற்றில், 10 ஆயிரத்து 148 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இரண்டாம் சுற்றில், 174 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் 20

சென்னை-''தமிழக பொறியியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், 25ம் தேதி துவக்கப்படும்,'' என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை, இரண்டு கட்டம் நிறைவடைந்துள்ளது. முதல் சுற்றில், 10 ஆயிரத்து 148 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இரண்டாம் சுற்றில், 174 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் 20 ஆயிரத்து 438 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 21 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். இந்த ஆண்டு 31 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இன்னும், மூன்று மற்றும் நான்காம் சுற்று தேர்வு நடக்க உள்ளது.

அப்போது, நிறைய மாணவர்கள் சேருவர். இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரிகளில், இடம் காலியாக இருக்க வாய்ப்பில்லை. அண்ணா பல்கலையில் கடந்த ஆண்டு, 'பயோடெக்னாலஜி' படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், பொருளாதார அடிப்படையில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மத்திய அரசு உதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

'அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்' என, மத்திய கல்வி அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுத உள்ளார். உதவித்தொகை வழங்குவர் என்று எதிர்பார்க்கிறோம்.பாரதியார் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உட்பட பல்வேறு பல்கலையில், பயோடெக்னாலஜி படிப்பு உள்ளது. பொருளாதார இட ஒதுக்கீடு எங்கும் பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை, முதல்வர் மிகத் திடமாக உள்ளார்.வசூலிக்கக் கூடாதுஅண்ணா பல்கலையில் இந்த ஆண்டு பயோடெக்னாலஜி படிப்புக்கு தேர்வு நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

பொறியியல் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், மருத்துவம் படிக்க சென்றால், காலியாகும் இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், 16 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன. இதில், 5,970 பேர் சேர்ந்துள்ளனர்; இன்னும் சேர உள்ளனர். அவர்களிடம், தனியார் கல்லுாரிகளும், கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளோம்.பயோடெக்னாலஜி படிக்க, மத்திய அரசு தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்து அனுப்புகிறது. 'தேர்வை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். நீங்கள் கொடுக்கும் உதவித் தொகையை வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான இட ஒதுக்கீடு வர வாய்ப்பில்லை. பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்த பின், வரும் 25ம் தேதி வகுப்புகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X