பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு 16,500 சிறப்பு பஸ்கள்!

Updated : அக் 13, 2021 | Added : அக் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : ''தீபாவளி பண்டிகைக்காக 16 ஆயிரத்து 540 பஸ்கள் இயக்கப்படும்,'' என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இது குறித்து, அமைச்சர் அளித்த பேட்டி:தீபாவளி சிறப்பு பஸ்களை இயக்கவும், நெரிசலை
 தீபாவளிக்கு 16,500 சிறப்பு பஸ்கள்!


சென்னை : ''தீபாவளி பண்டிகைக்காக 16 ஆயிரத்து 540 பஸ்கள் இயக்கப்படும்,'' என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, அமைச்சர் அளித்த பேட்டி:தீபாவளி சிறப்பு பஸ்களை இயக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி, போலீசார், போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன்.

கூடுதல் பஸ்கள்

நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை, சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, தீபாவளி முடிந்து திரும்புவோருக்கு உதவும் வகையிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதாவது, சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், நவ., 1 முதல் 3ம் தேதி வரை 3,506 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் 9,806 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற ஊர்களில் இருந்து மூன்று நாட்களுக்கும் 6,734 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகம் முழுதும் தீபாவளிக்காக 16 ஆயிரத்து 540 பஸ்கள்
இயக்கப்படுகின்றன.

அதேபோல், தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்காக, 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, சென்னைக்கு இயக்கப்படும் 4,319 பஸ்களுடன், தினசரி பஸ்களான 2,100 பஸ்கள், நான்கு நாட்களும் சேர்த்து 8,400 பஸ்கள் என, மொத்தம் 12 ஆயிரத்து 719 பஸ்கள்
இயக்கப்படும். மற்ற ஊர்களுக்கு 5,000 பஸ்கள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி முடிந்து தொழில் நகரங்களுக்கு திரும்பும் வகையில், மொத்தம் 17 ஆயிரத்து 719 பஸ்கள் இயக்கப்படும்.சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் ஆறு இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். அந்த பஸ் நிலையங்களுக்கு செல்லும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் வகையில், www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அவ்வாறு செய்ய இயலாதோருக்கு உதவும் வகையில், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10; தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் இரண்டு என, 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.பயணியருக்கு உதவும் வகையில், 20 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். பஸ்களின் இயக்கம் குறித்தும் புகார்கள் தெரிவிக்கவும், 94450 14450, 94450 14436 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதிக கட்டண புகார்

தனியார் சார்பில் 1,500 ஆம்னி பஸ்களை இயக்குவதாக, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கும்படி உத்தரவிட்டு உள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிப்பதோடு, பஸ்களும் முடக்கப்படும்.
இதற்காக, அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபடுவர். இது குறித்த புகார்களை, 044 -- 2474 9002, 1800 425 6151 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

எந்த ஊருக்கு எங்கு?

*சென்னையில் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, செங்குன்றம் வழியாக திருப்பதி, நெல்லுார் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்

*கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலுார் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்

*தாம்பரம் மெப்ஸ் எனும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்

*தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள்; போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள்; திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்

*பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து, வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்

*கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலுார், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

அந்த வழியாக போகாதீங்க!

கார் மற்றும் பிற வாகனங்களில் வெளியூர் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்துார் வழியாகச் செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் -- செங்கல்பட்டு வழியாகச் செல்லலாம்.

வழித்தட மாற்றம்!

முன்பதிவு செய்யப்பட்ட பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலுார் சென்று, அங்கிருந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் தான் நிற்கும். எனவே, தாம்பரம் மற்றும் பெருங்களத்துாரில் இருந்து பயணிக்க திட்டமிட்டுள்ளோர், ஊரப்பாக்கம் பஸ் நிலையம் சென்று பஸ் ஏற வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Angusamy s - Kelambakkam,இந்தியா
12-அக்-202120:45:06 IST Report Abuse
Angusamy s மொத்தமா தமிழ்நாட்டுல ஓடுற பஸ் எல்லாமே சிறப்பு பெருந்துதான் (கட்டண கொள்ளை) நல்ல நிர்வாகம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-அக்-202120:42:34 IST Report Abuse
Natarajan Ramanathan கோவில்களை மூடி வைத்து தீபாவளிக்கு பேருந்துகளை இயக்குவதால் என்னபயன் விஷேச நாட்களில் கோவிலுக்கு செல்வது இந்துக்களுக்கு மிகவும் முக்கியம். அதை கெடுக்கும் தத்தி அரசு விரைவில் ஒழிய வேண்டும்.
Rate this:
Cancel
jothi.n - chennai,இந்தியா
12-அக்-202109:19:15 IST Report Abuse
jothi.n காசு வேணும் ஆனா கோவில்கள் திறக்க கூடாது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X