பொது செய்தி

தமிழ்நாடு

மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் :கமிஷனருடன் சுவிஸ் குழு ஆலோசனை

Added : அக் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியுடன் இணைந்து, உக்கடம் பெரிய குளத்தில், 'மிதக்கும் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்' அமைக்க, சுவிட்சர்லாந்து துாதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கோவையில் திடக்கழிவு மேலாண்மையை கையாள, சில ஆண்டுகளாக, கோவை மாநகராட்சியுடன், சுவிட்சர்லாந்து அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. ஆர்.எஸ்.புரம், 22, 23, 24வது வார்டில், 'சூன்யா' திட்டத்தில், மக்கும் குப்பை

கோவை:கோவை மாநகராட்சியுடன் இணைந்து, உக்கடம் பெரிய குளத்தில், 'மிதக்கும் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்' அமைக்க, சுவிட்சர்லாந்து துாதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கோவையில் திடக்கழிவு மேலாண்மையை கையாள, சில ஆண்டுகளாக, கோவை மாநகராட்சியுடன், சுவிட்சர்லாந்து அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. ஆர்.எஸ்.புரம், 22, 23, 24வது வார்டில், 'சூன்யா' திட்டத்தில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அடுத்ததாக, காய்கறி கழிவுகளில் காஸ் உற்பத்தி செய்து, மின்னுற்பத்தி தயாரித்து, மின் விளக்குகளுக்கு பயன்படுத்தும் 'பிளான்ட்' அமைக்கப்பட்டது. பாரதி பார்க் பணிமனை வளாகத்தில் உள்ள மின் விளக்குகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன. இதற்கான நிதியை, சுவிசர்லாந்து வழங்கியது.பேஸ்-2 திட்டத்தில், உக்கடம் பெரிய குளத்தில், 'மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டம்' செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்து துாதரக அதிகாரி ஜொனாத்தன், சாக்ஸி ஆகியோர், கோவை வந்தனர்.
மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலை சந்தித்து பேசிய அவர்கள், உக்கடம் பெரிய குளம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தை களஆய்வு செய்தனர்.200 டன் மக்கும் குப்பையில் காஸ் தயாரித்து, வாகனங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்தனர். இத்திட்டங்கள் தொடர்பாக, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் விவாதித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''குளங்களில் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைப்பது; கரிம வாயு குறைப்பது தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்து துாதரக குழுவினர் விவாதித்தனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X