அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரிசி கடத்தல் அமைச்சர் எச்சரிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை-''ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அவர் பேசியதாவது:பண்டிகை காலம் மற்றும் மழை காலம் துவங்க உள்ளதால், ரேஷன்

சென்னை-''ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அவர் பேசியதாவது:பண்டிகை காலம் மற்றும் மழை காலம் துவங்க உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து தடையின்றி முன்கூட்டியே உணவு பொருட்களை அனுப்ப வேண்டும்.

கடைகளில் கார்டுதாரர்களை காத்திருக்க வைக்காமல், விரைந்து பொருட்கள் வழங்க வேண்டும்.மழை தண்ணீர் படாமல் இருக்கும் வகையில், உணவு தானியங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.இவ்வாறு சக்கரபாணி பேசினார்.பின் நிருபர்களிடம், அமைச்சர் கூறும்போது, ''தமிழக எல்லையோர மாவட்டங்களில் அரிசி கடத்தலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X