பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் மழைக்கால மருத்துவ முகாம்கள்

Added : அக் 12, 2021
Share
Advertisement
சென்னை--''விரைவில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:கடந்த 2006ல் கருணாநிதியால், 'வருமுன் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டது. அதில், பலர் பலனடைந்த நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் அத்திட்டம் முடக்கப்பட்டது. அத்திட்டம் கடந்த மாதம் 29ம் தேதி, சேலத்தில்

சென்னை--''விரைவில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:கடந்த 2006ல் கருணாநிதியால், 'வருமுன் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டது. அதில், பலர் பலனடைந்த நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் அத்திட்டம் முடக்கப்பட்டது. அத்திட்டம் கடந்த மாதம் 29ம் தேதி, சேலத்தில் மீண்டும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.உயர் சிகிச்சை தேவைப்படுவோர், மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

முதல்வரின் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளும், முகாம்களிலேயே வழங்கப்படுகின்றன.இனிவரும், மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் உள்ளிட்டவற்றுக்கு தீர்வளிக்கும் வகையில், சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.மருத்துவக் கல்லூரிகளில், 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள, 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்கு தான், ஒப்புதல் பெற வேண்டிஉள்ளது. மருத்துவக் கல்லுாரி இயக்குனர் தலைமையில், டில்லி சென்று ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றனர். அவற்றில் நான்கு மருத்துவக் கல்லுாரிகளை ஆய்வு செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உடன் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X