சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநில கொள்ளையன் ஸ்ரீபெரும்புதுாரில் 'என்கவுன்டர்'

Added : அக் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், 'டாஸ்மாக்' ஊழியரை சுட்டு கொன்றது, பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை பறித்தது என, அட்டூழியம் செய்த ஜார்க்கண்ட் மாநில கொள்ளையனை, 14 மணி நேர தேடுதலுக்கு பின், போலீசார் சுட்டுக் கொன்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக, வாரண வாசியைச் சேர்ந்த துளசி தாஸ், 43, பணிபுரிந்தார்.அக்.,

ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், 'டாஸ்மாக்' ஊழியரை சுட்டு கொன்றது, பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை பறித்தது என, அட்டூழியம் செய்த ஜார்க்கண்ட் மாநில கொள்ளையனை, 14 மணி நேர தேடுதலுக்கு பின், போலீசார் சுட்டுக் கொன்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக, வாரண வாசியைச் சேர்ந்த துளசி தாஸ், 43, பணிபுரிந்தார்.அக்., 4ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு கிளம்பிய போது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் துளசிதாஸ் பலியானார்; மற்றொரு ஊழியர் ராமுவுக்கு கையில் காயம் ஏற்பட்டது.துப்பாக்கி முனைஇந்நிலையில், ஸ்ரீபெரும் புதுார் அருகே பென்னலுார் கிராமத்தை சேர்ந்த இந்திரா, 55, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் பஸ்சுக்காக நின்றிருந்தார்.

அப்போது, வடமாநில வாலிபர்கள், துப்பாக்கி முனையில் இந்திராவிடம் இருந்து, 5 சவரன் தாலியை பறித்து தப்பினர். இந்திராவின் கூச்சல் கேட்டு, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள், வட மாநில வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களை நோக்கி, வடமாநில வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தினர். இதையடுத்து, அந்த வடமாநில வாலிபர்களை தேடும் பணியை, போலீசார் தீவிரப்படுத்தினர். அவர்கள் பதுங்கி இருந்தது ஏரி என்பதால், தேடுதல் வேட்டையில் சிரமம் ஏற்பட்டது.

அதனால், ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில், 10 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை நடந்தது. ஏரியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். புதர் மண்டிய பகுதி என்பதால், மூன்றுக்கும் மேற்பட்ட 'ட்ரோன்'கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர்.கூலி தொழிலாளிகள்நேற்று அதிகாலை 5:00 மணியளவில், புதருக்கு அடியில் இரண்டு பேர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவரை, தலைமை காவலர் மோகன்ராஜ் பிடித்தார்; அவரது கூட்டாளி தப்பினார். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையன் நயிம் அக்தர், 27, என தெரிய வந்தது.மேலும், தப்பிய கூட்டாளியான, ஜார்க் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்துஜா ஷேக், 30, ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் மதியம் 1:00 மணிக்கு முர்துஜா ஷேக்கை சுற்றி வளைத்தனர்.

அப்போது, தலைமை காவலர் மோகன்ராஜ் பிடிக்க முயன்றபோது, அவரை கத்தியால் வெட்டினார். தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் இரண்டு முறை சுட்டதில், முர்துஜா ஷேக்சம்பவ இடத்திலேயே பலியானார். இவர்கள் இருங்காட்டுகோட்டையில், கூலி தொழிலாளிகள் போல தங்கி, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. கொள்ளையர்களிடம் இருந்து, துப்பாக்கி, இரும்பு கம்பி, கொள்ளைக்கு பயன்படுத்தும் கருவிகள், 20க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., கார்டுகள், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார் கூறுகையில், ''கொள்ளையர்கள் இதற்கு முன் மூன்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து காவல் துறையிடம் தந்து உதவ வேண்டும்,'' என்றார்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
12-அக்-202109:25:50 IST Report Abuse
R S BALA சுட்டு தள்ளியது சரியான நடவடிக்கைதான் .. இது போன்ற சம்பவங்களை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிவது சரிதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X