பொது செய்தி

தமிழ்நாடு

வருமுன் காப்போம் திட்டம்: :கோவையில் இன்று துவக்கம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
கோவை:வருமுன் காப்போம் திட்டம், கோவை சின்ன வேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இன்று துவக்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில், 36, மாநகராட்சி பகுதியில், 4 மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடைபெறும்.பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், மகப்பேறு, பெண்கள் நலம், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற, 10

கோவை:வருமுன் காப்போம் திட்டம், கோவை சின்ன வேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இன்று துவக்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில், 36, மாநகராட்சி பகுதியில், 4 மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடைபெறும்.பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், மகப்பேறு, பெண்கள் நலம், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற, 10 வகையான 'ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர்கள், நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.இலவசமாக ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், இ.சி.ஜி., மற்றும் எக்கோ பரிசோதனை செய்யப்படும்; இலவசமாக மருந்து வழங்கப்படும்.மேற்பரிந்துரை தொடர் சிகிச்சை தேவைப்பட்டால், நோயின் தன்மைக்கேற்ப, விரிவான காப்பீடு திட்டம் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவர்.கொரோனா தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படும். சித்தா மருத்துவம் உள்ளிட்ட பல்துறை விளக்க கண்காட்சியும் நடத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X