செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லை குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லை குறைவு

Added : அக் 12, 2021
Share
மாமல்லபுரம் : தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு உள்ளதால், செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைப் பகுதி குறுகியது.செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை நிர்வாகம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம், வண்டலுார் ஆகிய உட்கோட்ட பகுதிகளுடன் இயங்குகிறது.செங்கல்பட்டு உட்கோட்ட பகுதியில் ஐந்து; மாமல்லபுரத்தில் ஒன்பது; மதுராந்தகத்தில் ஏழு; வண்டலுாரில் மூன்று என, சட்டம் -

மாமல்லபுரம் : தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு உள்ளதால், செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைப் பகுதி குறுகியது.செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை நிர்வாகம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம், வண்டலுார் ஆகிய உட்கோட்ட பகுதிகளுடன் இயங்குகிறது.

செங்கல்பட்டு உட்கோட்ட பகுதியில் ஐந்து; மாமல்லபுரத்தில் ஒன்பது; மதுராந்தகத்தில் ஏழு; வண்டலுாரில் மூன்று என, சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள் இயங்குகின்றன. மாவட்டத்தில் ஒன்பது காவல் நிலைய பகுதிகளுடன், மாமல்லபுரம் உட்கோட்ட பகுதி, பரப்பளவில் பெரியதாக அமைந்திருந்தது.இந்த உட்கோட்டம், 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டபோது, மக்கள்தொகை, குற்றங்கள் குறைவு.

இதன் கீழ் உள்ள கேளம்பாக்கம், தாழம்பூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பன்னாட்டு ஐ.டி., நிறுவனங்கள், தனியார் பொறியியல் கல்லுாரிகள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்டவை அதிகரித்து, மக்கள்தொகை பெருகுகிறது; குற்றங்கள் அதிகரித்துள்ளன.எனவே கண்காணிப்பு, குற்ற தடுப்பிற்காக, கேளம்பாக்கம், தாழம்பூர் காவல் நிலைய பகுதிகளுடன், கேளம்பாக்கம் காவல் உட்கோட்ட பகுதி உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.இச்சூழலில் மாமல்லபுரம் உட்கோட்ட பகுதியின் கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலைய பகுதிகள், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்துடன், இணைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் உட்கோட்ட பரப்பு, ஏழு காவல் நிலைய பகுதிகளுடன் குறைக்கப்பட்டுள்ளது.வண்டலுார் உட்கோட்ட பகுதியின் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி காவல் நிலைய பகுதிகளும், தாம்பரம் ஆணையரக பகுதியுடன் இணைக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு உட்கோட்ட பகுதி குறைந்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X