பொது செய்தி

தமிழ்நாடு

புதருக்குள் மறைந்த மகளிர் சுகாதார வளாகம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
கொண்டஞ்சேரி : கொண்டஞ்சேரி ஊராட்சியில், பயன்பாடில்லாத மகளிர் சுகாதார வளாகம் புதர் மண்டி, மாயமாகி வருவது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.இந்த மகளிர் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்தது. மேலும், குடிநீர்
 புதருக்குள் மறைந்த மகளிர் சுகாதார வளாகம்

கொண்டஞ்சேரி : கொண்டஞ்சேரி ஊராட்சியில், பயன்பாடில்லாத மகளிர் சுகாதார வளாகம் புதர் மண்டி, மாயமாகி வருவது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.இந்த மகளிர் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்தது. மேலும், குடிநீர் தொட்டியும், சேதமடைந்ததால் பெண்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், முட்புதர் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி, சுகாதார வளாகம் மாயமாகி வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மகளிர் சுகாதார வளாகத்தை ஆய்வு செய்து, ஊராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X