நெல் குவியலால் விபத்து அபாயம்

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் : பூதுாரில் சாலையில் நெல் குவித்து, இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன.திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் வழித்தடத்தில், வாகனங்கள் அதிகம் கடக்கின்றன. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து செல்லும் வாகனங்கள், இவ்வழியே செல்கின்றன. பூதுார் பகுதியில், அறுவடை செய்த நெல் சாலையோரம் குவிக்கப்பட்டு உள்ளதால் போக்கு வரத்திற்கு இடையூறு
 நெல் குவியலால் விபத்து அபாயம்

திருக்கழுக்குன்றம் : பூதுாரில் சாலையில் நெல் குவித்து, இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன.

திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் வழித்தடத்தில், வாகனங்கள் அதிகம் கடக்கின்றன. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து செல்லும் வாகனங்கள், இவ்வழியே செல்கின்றன. பூதுார் பகுதியில், அறுவடை செய்த நெல் சாலையோரம் குவிக்கப்பட்டு உள்ளதால் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.விவசாயிகள், தனியார் அரிசி ஆலையில் நெல் அரைக்க, இப்பகுதியில் தொடர்ச்சியாக நெல் குவிக்கின்றனர்.

மழையில் நனையாமல் தவிர்க்க, தார்பாலின் போர்த்தி, பறக்காமல் இருக்க கற்கள் வைத்துள்ளனர்.இருசக்கர வாகன பயணியர், எதிரில் பஸ், லாரி என வரும்போது ஒதுங்க இயலாம் சிரமப்படுகின்றனர். வேகமாக வருவோர் நெற்குவியலில் தடுமாறி விழுந்து, கற்களில் அடிபட்டு காயமடைகின்றனர். குறிப்பாக இரவில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.விபத்தை தவிர்க்க, நெற்குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X