பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிகழ்ச்சிகளில் கச்சேரி வாய்ப்பு: மங்கள வாத்திய இசை முழங்க கோரிக்கை

Added : அக் 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:அரசு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்க வேண்டுமென, நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டம் நிறைவடையும் தருவாயில், மங்கள வாழ்த்து பாடியது போல், திடீரென மங்கள வாத்திய இசை இசைக்கப்பட்டது.அதிகாரிகளும், அலுவலர்களும் ஆச்சரியத்துடன்
 அரசு நிகழ்ச்சிகளில் கச்சேரி வாய்ப்பு: மங்கள வாத்திய இசை முழங்க கோரிக்கை

திருப்பூர்:அரசு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்க வேண்டுமென, நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டம் நிறைவடையும் தருவாயில், மங்கள வாழ்த்து பாடியது போல், திடீரென மங்கள வாத்திய இசை இசைக்கப்பட்டது.அதிகாரிகளும், அலுவலர்களும் ஆச்சரியத்துடன் சென்று பார்த்த போது, 50க்கும் அதிகமான நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள், இன்னிசை இசைத்தபடி, கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.பிறகு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனு விவரம்:கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, திருவிழா, திருமணம், சீர் மற்றும் காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இசை கலைஞர்களுக்கு, மாதாந்திர உதவியும், முதியோருக்கு ஓய்வூதியமும் வழங்க வேண்டும். இசை கருவிகளை இலவசமாக வழங்கி, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.கோவை, திருப்பூர் மாவட்ட நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களுக்கு விருது வழங்க வேண்டும். அரசு விழாக்களில், இன்னிசை இசைக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இலவச வீடு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X